முருகப்பெருமான் தலங்கள் : வள்ளிமலை முருகப்பெருமான் ஆலயம்.
முருகப்பெருமான் தலங்கள் : வள்ளிமலை முருகப்பெருமான் ஆலயம். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சிறிய மலையில் அமைந்திருக்கின்றது இந்த வள்ளிமலை தலம். இங்குதான் முருகப்பெருமான் வள்ளியினை சந்தித்தார் என்பதால், திருத்தணியில் வள்ளியுடன் திருமணம் நடந்தாலும் அந்தத் திருமணத்துக்கான எல்லாக் காட்சியும் இங்குதான் நடந்தது என்பதற்கான சுவடுகளும் ஆதாரமும் நிரம்ப இருப்பதால் இந்தத் தலம் முருகப்பெருமானின் தலங்களில் மிக முக்கியமான ஒன்றாகின்றது. தன் பூர்வ ஜென்மத்தின் வாசனையால் முருகனை மணக்க வள்ளி திருமால் பாதத்தை வழிபட்ட இடம் இதுதான். […]