பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கந்த சஷ்டி விரதம் – சூரசம்ஹாரம்

இன்று (13 / 11/ 2023) கந்த சஷ்டி விரதம் தொடங்குகின்றது, இந்துக்களின் தனிபெரும் அடையாளமாகவும் தமிழரின் தனிபெரும் தெய்வமாகவும் விளங்கும் முருகனுக்கு 6 நாள் நடக்கும் விரதம் இது. இந்துக்களின் பாரம்பரிய சம்பிரதாயபடி தீமை அழியும் பண்டிகையினை கொண்டாட விரதம் அவசியம். அப்படி நவராத்திரி விரதம் போல , தீபாவளிக்கு முந்தைய கேதார கவுரி விரதம் போல சூரசம்ஹாரத்துக்கும் அந்த விரத கடமை உண்டு. முருகனுக்கு ஆறு முகம் என்பது தெரியும், அதற்கு புராண கதையும் […]

நவபுலியூர் தலங்கள்

01 சிதம்பரம், 02 திருப்பாதிரிபுலியூர், 03 திரு எருக்கத்தம்புலியூர், 04 திருஓமம்புலியூர், 05 திருக் கண்ணாட்டாம்புலியூர், 06 சிறுபுலியூர், 07 அத்திப் புலியூர், 08 தப்பளாம்புலியூர், 09 திருபெரும்புலியூர். மார்கழி மாத வழிபாடுகளில் திருப்பாவையும் திருவெம்பாவையும் தனி இடம் பிடிப்பது போல , ஸ்ரீரங்க ஆலயமும் சிதம்பரம் ஆலயமும் இம்மாதம் விழாக்காலம் கொண்டு ஜொலிக்கும். எல்லா சைவ வைணவ ஆலயங்களில் மார்கழி சிறப்பிக்கபட்டாலும் இரு ஆலயங்களுமே மார்கழியில் தனித்து கொண்டாபடும். தனி தனியே அதுவும் சைவம் வைணவம் […]

ரம்பை திரிதியை

இந்துக்களின் பண்டிகையும் விரதகாலங்களும் ஆயிரமாயிரம் பொருள் கொண்டவை, ஒவ்வொரு மானிடருக்கும் ஏகப்பட்ட போதனைகளை தருபவை. மாந்தர்க்கு போதனைகள் நிரம்ப தரும் அம்மதம், வாழ்வின் ஆதாரமும் உலகை இயக்குபவர்களுமான பெண்களுக்கு ஏகப்பட்ட போதனைகளைத் தந்தது. சாவித்திரி விரதம் போன்ற ஏகப்பட்ட விரதம் மூலம் போதனைகளை சொன்ன அம்மதம், சீதா, திரவுபதி எனப் பலர் மூலமாக பல பாடங்களைச் சொன்ன மதம், பெண்களுக்கு ஏகப்பட்ட படிப்பினைகளை தந்தது. புராணங்களில் நடந்ததும் அவதாரங்களில் நடந்ததும் மானிடருக்கு வழிகாட்டவே என்பதை மிக இயல்பாகச் […]

ஸ்ரீம‌ன் நாராயணீயம்

கார்த்திகை மாதம் 28ம் தேதி குருவாயூரில் அரங்கேற்றப்பட்டது. காலம் காலமாக ஒவ்வொரு காலத்திலும் அரும்பெரும் புனிதமான இந்து நூல்களை வழங்கிய இந்துமதம் 15, 16ம் நூற்றாண்டிலும் அற்புதமான நூல்களை, பக்தி வழிபாட்டு பாடல்களை, ஸ்லோகங்களை மக்களுக்கு கொடுத்தது. அக்காலகட்டத்தில் தான் அபிராமிபட்டரின் அபிராமி அந்தாதி, அருணகிரிநாதரின் அழியா நூல்கள், குமரகுருபரரின் மகா பெரிய பக்தி நூல்களெல்லாம் வந்தன‌. அதே காலகட்டத்தில் கேரளத்தில் உருவான நூல்தான் “ஸ்ரீம‌ன் நாராயணீயம்” கேரளம் பரசுராமரால் உருவாக்கபட்டு மாவலி சக்கரவர்த்தியால் சிறப்புற ஆளபட்டு […]

நரகாசுர வதம் – தீபாவளிப் பண்டிகை

இந்தியாவில் மட்டுமல்ல அதை தாண்டி உலகில் என அரைவாசி நாடுகளில் கொண்டாடபடும் மிகபெரும் பண்டிகை தீபாவளி இந்த பண்டிகை ஒரு விஷேஷமான பண்டிகை பல காரணங்களுக்காக அது கொண்டாடபடும் ராமன் மறுபடி அயோத்தி திரும்பியது, கேதார கவுரி விரதம் நிறைவுற்று சக்தி சிவனோடு சேர்ந்தது என காரணங்கள் ஏராளம் எனினும் மகா முக்கிய விஷயம் நரகாசுர வதம் நரகாசுரன் வராக அவதாரத்துக்கும் பூமாதேவிக்கும் பிறந்தான் என சில இடங்களில் சொல்லபட்டாலும் உண்மை அது அல்ல என்பார்கள்,காரணம் வராக […]

தன்வந்திரி ஜெயந்தி

உலகின் மிக தொன்மையான் இந்து இனமே ஆக சிறந்த மருத்துங்களையும் தன்னில் கொண்டுள்ளது, இன்று உலகின் மருத்துவம் ஐரோப்பியரின் மாபெரும் வியாபாரம் என மாறிவிட்ட நிலையில் உலகையே தங்கள் மருத்துவ வியாபாரபிடியில் அவர்கள் கொண்டுவந்த நிலையில் நோய்கள் குறைகின்றதா என்றால் இல்லை. மாறாக கூடிக் கொண்டே செல்கின்றது, ஒவ்வொரு நோயும் தீர்வதாக அவர்கள் சொல்லும் மருத்துவம் பின் ஓராயிரம் புதிய நோய்கள் பக்க விளைவாகவும் அவர்கள் ஆய்வின் பலவீனமாகவும் வரும்போது மவுனம் காக்கின்றது. ரத்தபீஜனை போல ஒரு […]

ஞானசித்தர் – சுப்பிரமணிய பாரதியார்

காசி ஒரு புண்ணிய நகரம், அது மாபெரும் பிரபஞ்ச சக்தியினை தன்னுள் வைத்துகொண்டு இந்துஸ்தானத்துக்கான வழிகாட்டிகளை, மிகச் சரியான ஆற்றல் மிக்கவர்களை, இறைசக்தி தேடிக் கொண்டவர்களை எதிர்பார்த்து கொண்டே இருக்கும். உரிய காலத்தில் உரிய நபர் அங்கு கால் வைத்துவிட்டால் தன்னிடம் வந்து அமர்ந்துவிட்டால் எல்லா சக்திகளையும் ஞானத்தையும் அவர்களுக்கு அள்ளி கொடுத்து அனுப்பி வைக்கும். அதன்பின் அந்த பிறப்பு செயற்கரிய சாதனைகள் பல செய்து உயர்ந்து நின்று ஜோதியாய் வழிகாட்டும். வரலாற்றில் ஆதிசங்கரர் முதல் விவேகானந்தர், […]

நான் எப்படி எழுத வந்தேன்?

நான் எப்படி எழுதவந்தேன் என்றால் என்னை இழுத்து வந்தவர் அவர்தான். சேட்டை அதிகமான மந்தியினை நோக்கி கல்லெறியும் ஒருவன், அட நமக்கும் கல்லெறிய வருகின்றதே என வீசிப் பழகி, பின் ஈட்டி எறிந்து , துப்பாக்கி சுட்டு பழகுவது போல் நம் நிலைமையும் ஆகிவிட்டது. நிஜத்தில் நாம் எதுவும் எழுதியதில்லை. 10ம் வகுப்பு படித்தபொழுது எதையோ எழுதிக்காட்டி “அதிகப்பிரசங்கி” என தமிழம்மா பேப்பரை கிழித்துபோட்டது நினைவிருக்கின்றது. அதன் பின் எதையும் எழுதியதில்லை. கட்டுரை போட்டியோ, பத்திரிக்கையோ எங்கும் […]

திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்

தமிழகம் சிவபெருமானின் விருப்பத்துகுரிய இடம். அவரின் திருவிளையாடல் பல இங்குதான் நடந்தது. அவர் தன் பிரதான சித்தரான அகத்தியரை இங்குதான் அனுப்பி தமிழை உருவாக்கி வளரச் செய்தார். தமிழ்சங்க தலைவராக எப்பொழுதும் சிவனேதான் விளங்கினார். அந்த சிவன் ஒரு காலத்தில் தமிழகத்தை காக்க முருகனை அனுப்பினார். அகத்தியரை அனுப்பினார். பின்னும் யார் யாரையெல்லாமோ அனுப்பி கொண்டிருந்தார். அப்படி வந்தவர்களெல்லாம் பெரும்பாலும் முருகப்பெருமானின் அடியாராக அல்லது அவரின் சாயலிலே இருந்தார்கள். முருகனின் அருள் பெற்றவர்களாகவே இருந்தார்கள். ஆம், முருகன் […]

வள்ளுவன் ஒரு சுத்தமான இந்து

வள்ளுவன் ஒரு சுத்தமான இந்து என்பதை எவ்வளவோ வழிகளில் சொல்லமுடியும். அதை தயக்கமின்றி விளக்கலாம். “ஆதி பகவன்” என்பது இந்துக்களின் சிவனையும் சக்தியினையும் குறிக்கும் சொல். இன்றும் “பகவதி” என்றே அன்னை ஆதி தமிழான மலையாளத்தில் அழைக்கப் படுகின்றார். “ஓம் நமோ பகவதே” என்பதே இந்து மந்திரங்களின் மூல மந்திரம், தொடக்க மந்திரமாக இன்று வரை உள்ளது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றையும் ஆதிபகவன் பெயரைச் சொல்லி அழைத்து தொடங்குவது இந்துக்கள் மரபாய் இருந்தது, வள்ளுவன் ஒரு இந்துவாக அதைச் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications