பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திருவிளையாடல் புராணம் 48 :வலைஞன் மகளான வையத்து நாயகி.

திருவிளையாடல் புராணம் 48 :வலைஞன் மகளான வையத்து நாயகி. ஒருமுறை கயிலாயத்தில் பார்வதியுடன் தனித்திருந்த சிவபெருமான் அவளுக்கு மிக உயர்ந்த உபதேசங்களைச் செய்து கொண்டிருந்தார். ஆனால், அவள் மனம் போதனையில் லயிக்கவில்லை. மாறாக, எங்கோ எண்ண அலைகளை வீசிக்கொண்டிருந்தாள். அதை உணர்ந்த சிவபெருமான் கடும் கோபம் கொண்டார். யாருக்கும் கிடைக்காத அரிய பாக்கியத்தை உனக்குத் தந்தேன் ஆனால் உன் மனம் அதில் லயிக்காமல் பூலோகப் பெண்களின் மனம் போல் ஏதோ எண்ண அலைகளில் சிக்கிவிட்டது, நீ என்னை […]

திருவிளையாடல் புராணம் 47 : விருத்தகுமார பாலரான படலம்.

திருவிளையாடல் புராணம் 47 :விருத்தகுமார பாலரான படலம். விக்கிரம பாண்டியன் மதுரையினை ஆட்சிச் செய்தக் காலத்தில் விருபாஷன் எனும் அந்தணன் வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் வேதங்களிலும் அதை ஓதுவதிலும் சிறந்தவன்; சாஸ்திரம் அனைத்தும் அறிந்தவன்; அவன் மனைவி சுபவிரதை எனும் நற்குண மங்கை. இவர்களுக்கு நெடுநாளாகக் குழந்தை இல்லை. எல்லாச் செல்வமுமிருந்தும் குழந்தைச் செல்வமில்லை. இதனால் இருவரும் மதுரை ஆலவாயன் சந்நிதியில் சோமவார விரதமிருந்து பொற்றாமரையில் நீராடி அவரை வழிபட்டுத் தவமிருந்து ஒரு பெண் குழந்தைப் பெற்றார்கள். […]

திருவிளையாடல் புராணம் 46 : ஐயன் ஐராவதத்துக்கு இரங்கிய படலம்.

திருவிளையாடல் புராணம் 46 : ஐயன் ஐராவதத்துக்கு இரங்கிய படலம். ஒருமுறை காசியில் ஈசனை வழிபடச் சென்றார் துர்வாச முனிவர். கங்கையில் நீராடி அன்னை விசாலாட்சியினை வணங்கிவிட்டு காசிநாதன் சந்நிதிக்கு வந்தவர் தன் கையாலே அவருக்குப் பூஜை செய்தார். அந்தப் பூஜையில் மகிழ்ந்த ஈசன் அவர் கைகளில் ஒரு மலரை விழச் செய்தார். அது ஈசனின் தலையில் இருந்த பொன்னிறத் தாமரை மலர், அதைக் கண்களில் ஒற்றிக் கொண்டு தன் கையோடு வைத்திருந்த முனிவருக்கு அசுரர்களுடனான யுத்தத்தில் […]

திருவிளையாடல் புராணம் 45 : மேருவினைச் செண்டால் அடித்த படலம்.

திருவிளையாடல் புராணம் 45 : மேருவினைச் செண்டால் அடித்த படலம். உக்கிரபாண்டியன் மதுரையினைச் சீரும் சிறப்புமாக ஆட்சிசெய்து கொண்டிருந்தான். மனைவி காந்திமதி, மகன் வீரபாண்டியன் என அவன் குடும்பம் மகிழ்ந்திருந்தது. அவனுக்கு எதிரிகள் எனப் பூவுலகில் யாருமே இல்லை, வானுலகிலுமில்லை எனும் அளவு அவன் கீர்த்திக் கொடிகட்டிப் பறந்தது. அவன் சோமவார விரதத்தைப் பக்தியோடு அனுசரித்துவரும் பக்தன் என்பதால் சிவனுக்கும் அவனுக்குமான பந்தம் உன்னதமாய் இருந்தது, அவன் சிவனுக்குள் எப்போதும் கரைந்திருந்தான். அப்படியானவன் ஆட்சியில் மழை பொய்க்கத் […]

திருவிளையாடல் புராணம் 44 :கார்த்திகைப் பெண்கள் கற்பாறையான படலம்.

திருவிளையாடல் புராணம் 44 :கார்த்திகைப் பெண்கள் கற்பாறையான படலம். ஒருமுறை கயிலாயத்தில் சிவபெருமான் பார்வதியோடு வீற்றிருந்த நேரம் பல முனிவர்கள், ரிஷிகள் அவரைக் காண வந்தார்கள். பிருங்கி முனிவர், மாகாளர், நான்கு சனகாதி முனிவர் எனப் பலர் வந்திருந்தார்கள். அப்போது கார்த்திகைப் பெண்களும் வந்திருந்தார்கள். அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என அவர்கள் அறுவர். இவர்கள்தான் முருகப்பெருமானை வளர்த்தவர்கள், கார்த்திகை நட்சத்திரத்தின் ஆறு நட்சத்திரமாக இருப்பவர்களும் இவர்களே. இவர்களுக்கு ஒர் ஆசை வந்தது. அது […]

திருவிளையாடல் புராணம் 43 : வன்னிமரமும் கிணறும் லிங்கமும் சாட்சி சொன்ன படலம்.

திருவிளையாடல் புராணம் 43 : வன்னிமரமும் கிணறும் லிங்கமும் சாட்சி சொன்ன படலம். சோழநாட்டின் நாகப்பட்டினம் அருகே ஒரு வணிகன் இருந்தான். அவனுக்குத் திரண்ட சொத்தும் இருந்தது. ஆனால், பிள்ளை செல்வமில்லை. நெடுநாள் கழித்து அவனுக்கோர் மகவுப் பிறந்தது, அவளுக்கு இரத்னாவளி எனப் பெயரிட்டு வளர்த்தான். அவனுக்கோர் தங்கை உண்டு. அவளுக்கு அரதன குப்தன் என்றொரு மகன் இருந்தான். நாகப்பட்டினம் அருகே இருந்த வணிகனுக்கு தன் மகளை, தன் தங்கை மகனுக்குத் திருமணம் செய்துவைக்கும் எண்ணம் முதலிலே […]

திருவிளையாடல் புராணம் 42 :ஏழு கடல்கள் வாவியில் கலந்த படலம்.

திருவிளையாடல் புராணம் 42 :ஏழு கடல்கள் வாவியில் கலந்த படலம். அது மதுரையில் மீனாட்சியும், சொக்கநாதரும் வாழ்ந்து கொண்டிருந்த காலம். அதாவது, தடாதகை பிராட்டியாரோடு மதுரையில் பரிபாலனம் செய்து கொண்டிருந்தார் சொக்கநாதர். அவரைக் காணத் தேவர்களும், மாபெரும் ரிஷிகளும் மதுரைக்கு வந்து சென்றார்கள். ரிஷிகள், தவசிகள் ஓயாமல் வந்து கொண்டிருந்தார்கள்.‌ அப்படிக் கௌதம ரிஷி வந்திருந்தார். அவர் மகரிஷி, எல்லா ஞானமும் பெரும் தத்துவம் அறிந்திருந்தவர். அவருக்குத் தெரியாதது என ஏழு உலகிலும் எதுவுமில்லை. எல்லாரும் தம்முடைய […]

திருவிளையாடல் புராணம் 41 : உக்கிரபாண்டியன் வேல் எறிந்த படலம்.

திருவிளையாடல் புராணம் 41 : உக்கிரபாண்டியன் வேல் எறிந்த படலம். அப்போது பாண்டிய நாட்டை உக்கிரபாண்டியன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். இவன் எல்லா உலகிலும் வல்லமை பெற்றிருந்தான். ஒருவகையில் சோழ சக்கரவர்த்தி முசுகுந்த சோழனின் சாயலில் இவன் வீரமும் செல்வாக்கும் எல்லா உலகிலும் கொடிகட்டிப் பறந்தது. தர்மப்படி வேதப்படி மிகச் சிறந்த ஆட்சியினைப் பாண்டியன் கொடுத்துக் கொண்டிருந்தான். சாஸ்திரப்படி எல்லா யாகங்களையும் ஹோமங்களையும் அவன் செய்தான். எல்லா விதமான பூஜைகளும் அவன் நாடெங்கும் நடந்தது. அவன் தொண்ணுற்றாறு […]

திருவிளையாடல் புராணம் 40 : குலபூஷணனுக்கு பொற்கிழி தந்த படலம்.

திருவிளையாடல் புராணம் 40 : குலபூஷணனுக்கு பொற்கிழி தந்த படலம். அப்போது பாண்டிய நாட்டை குலபூஷண பாண்டியன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன் மாபெரும் சிவபக்தன், சிவனைப் பாண்டிய தேசத்தின் மன்னராக முன்னிறுத்தி தான் ஒரு சேவகனாக நின்று பாண்டிய நாட்டை திறம்பட ஆட்சி செய்து வந்தான். பாண்டிய நாடு வளம் கொழித்தது. பெருகி வரும் வைகையும், அது கொடுத்த பெரும் விளைச்சலும் எல்லா வகை நிலத்தின் செல்வமும் கொடுத்தன. வைகை தாமிரபரணியின் பெருக்கால் நெல் உள்பட […]

திருவிளையாடல் புராணம் 39 : மாய பசுவினை வதைத்த படலம்.

திருவிளையாடல் 39 : மாய பசுவினை வதைத்த படலம். பாண்டிய தேசத்தில் சைவத்தை ஒழித்து சமணத்தை நிலைநாட்டியே தீரவேண்டும், சைவம் கொஞ்சமும் அடையாளமின்றி அழியவேண்டும் என மிகுந்த ஆவேசத்தை மனதில் கொண்ட சமணர்கள் காஞ்சிபக்கம் இருந்து மீண்டும் மீண்டும் பாண்டியநாட்டுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அந்த முயற்சியில்தான் ஒருமுறை மாய யானை, இன்னொருமுறை நாகம் என ஏவி விட்டார்கள். அவர்களின் இலக்கு பாண்டிய தேசத்தை மன்னன் இல்லாத் தேசமாக திண்டாடவிட்டு அந்தக் குழப்பத்தில் மக்களைக் குழப்பலாம் புதிய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications