பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வழிபாடுகள்

காரடையான்சாவித்திரிஅக்கால‌ பாரததித்தில் அசுபதி என்றொரு மன்னன் இருந்தான், அவனுக்கு வாரிசு என ஒரு மகள் இருந்தாள், அழகிலும் அறிவிலும் சிறந்தவளான அவளுக்கு புனிதமான பெயரான சாவித்திரி எனும் பெயர் சூட்டினான், ஆம் சரஸ்வதியின் இன்னொரு பெயர் சாவித்திரி, எது உன்னதமும் உயர்ந்ததும் ஆசீர்வாதமுமானதோ அதற்கு சூட்டும் பெயர் சாவித்திரிஅந்த சாவித்திரிக்கு திருமண வயதும் வந்தது, அக்கால இந்து சம்பிரதாயம் பெண்கள் தன் கணவனை தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் அளித்தது, தன் பாதுகாவலர் ஆலோசகரான பெரியவரகள் சூழ தானே […]

வரிகளை விளக்க முடியுமா?

அய்யா இந்த கந்த சஷ்டி கவசத்தின் வரிகளை பற்றி பலவாறு சொல்லுகின்றார்கள் இந்த வரிகளை விளக்க முடியுமா? இந்த வரிகளை சொன்னால் 36 முறை வருமா? ஏன் இதையெல்லாம் சொல்லவேண்டும் இதன் பொருளை விளக்க முடியுமா என சிலர் கேட்பதால் சொல்கின்றோம் நாம் சொல்வது சில சித்தர்கள் சொன்ன மொழியின் குறிப்புகளில் இருந்தும் சைவ ஆகம விதிகளில் இருந்தும் சொல்கின்றோமே அன்றி எம் கருத்து அல்ல‌ மகா புனிதமானதும் சூட்சும பொருள் கொண்டதுமான இந்த சஷ்டி கவச […]

திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணம் 01 : (மதுரையம்பதி ஆவணி மூல திருவிழா.01)கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம். சிவபெருமானும் அன்னை தேவியும் ஆட்சிசெய்யும் அந்த மதுரையில் அன்று அவர்கள் பிரதிநிதியாக இராஜராஜ‌பாண்டியன் மகன் சுகுணபாண்டியன் ஆண்டுகொண்டிருந்தான். அக்கால கட்டம் மிக மிக தொன்மையானது, எல்லா உயிர்களும் தங்கள் இயல்பில் கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்ட காலமிது. இந்த உலகில் மானுடர் மட்டும் காலத்துக்கு ஏற்ப மாறி நிலைத்துக்கொண்டிருப்பதில்லை, காலம் மாற மாற சிந்தனை பெற்று வளர்வதில்லை, இந்த மாற்றம் எல்லா உயிர்க்கும் […]

சப்த கன்னியர்

சப்த கன்னியர் 01 : பிராம்மி. இந்த பிரபஞசத்தை இயக்கும் மகா சக்திகளை ஏழுவிதமான சக்திகளாக பிரித்துச் சொன்ன இந்துமதம் அவர்களைச் சப்த கன்னியர், சப்த மாதர்கள் என்ற அடையாளமிட்டுச் சொன்னது. இந்தச் சக்திகள் இயக்கும் சக்திகள், இயங்கும் பலத்தையும் அருளையும் தரும் சக்திகள். அந்த சக்திகளின் பலத்தாலே இந்தப் பிரபஞ்சமும் அண்டமும் அண்டத்தின் வடிவமான மானிட பிண்டம் எனும் மானிட உடலும் இயங்குகின்றது. இந்தச் சக்திகளின் தோற்றம் பற்றி புராணத்தில் பல கருத்துக்கள் உண்டு. சிவன் […]

சிவராத்திரி

சிவராத்திரி என்பது ஒவ்வொரு இந்துவும் விழித்திருந்து சிவாலயங்களுக்கு சென்று சிவனை தரிசித்து அருள் பெற வேண்டிய இரவு, அன்று கண்டிப்பாக சிவாலயம் செல்ல வேண்டும், இந்துக்கள் இந்துக்களாக இருக்க இம்மாதிரி ஏற்பாடுகளை மிக கண்டிப்பாய் பின்பற்றுதல் அவசியம் அந்த இரவில் ஒரே ஒரு சிவாலயத்தினை மட்டும் தரிசிப்பததை விட பல சிவாலயங்களை, குறைந்தது நான்கு சாமத்துக்கு நான்கு சிவாலாங்களினை தரிசிப்பது மிக நல்லது போக்குவரத்து எளிதாகிவிட்ட காலங்களில் அருகிருக்கும் சிவாலயங்கள் பலவற்றை தரிசித்தல் எளிது சிவராத்திரி என்பதற்காக […]

சிவராத்திரி சிவாலயங்கள்

சோமவார தொடக்கமான இந்த நாளின் மாலையில் இருந்து இந்த தேசம் முழுக்க சிவராத்திரி வழிபாட்டுக்குள் செல்கின்றது இனி வரும் மூன்று இரவுகளும் மிக முக்கியமானவை, அதுவும் மகா கும்பமேளா நடக்கும் இந்த காலகட்ட சிவராத்திரி மிக மிக முக்கியமானது இந்த மூன்று மாலைகளும் முக்கியமானவை, அதுவும் மூன்றாம் நாள் இரவு முழு விழிப்பு வழிபாடும் நான்கு சாம பூஜைகளும் அதி முக்கியமானவை தேசம் பாரத பிரதமர் மோடி தலமையில் அவருடன் சிவராத்திரி வழிபாட்டை முன்னெடுக்கின்றது, எல்லா வகையிலும் […]

கார்த்திகை சோமவாரத்தில் வழிபட வேண்டிய முக்கிய சிவாலயங்களில்

கார்த்திகை சோமவாரத்தில் வழிபட வேண்டிய முக்கிய சிவாலயங்களில் திருநெடுங்க‌ளம் ஆலயமும் ஒன்று. இது திருச்சி அருகே அமைந்துள்ளது. இங்கு சிவன் திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர் என அமர்ந்திருக்க, அன்னை மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி என அழைக்கப்படுகின்றார். சம்பந்த பெருமான் தன் தேவாரத்தில் இந்த ஆலயத்தின் “இடர் களையும் பதிகம்” என ஈசன் மேல் பத்து பாடல்களை பாடியுள்ளார், இப்படிப் தொடங்கி பாடியுள்ளார். “மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுன்னைப் பேசினல்லால்குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்தநிறையுடையார் […]

பஞ்ச நாக தலங்கள்

பஞ்ச நாக தலங்கள் 01 : திருநாகேஸ்வரம் “தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந் தலையவனை மலையவனை உலக மெல்லாம் ஆயவனைச் சேயவனை அணியான் றன்னை அழலவனை நிழலவனை அறிய வொண்ணா மாயவனை மறையவனை மறையோர் தங்கள் மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே” நாக வழிபாட்டு தலங்களை எல்லோரும், அறிந்திருப்போம் ஆனால் நாகங்கள் கூட்டாக வந்து வழிபட்ட தலங்கள் வெகு சில அவற்றில் ஒன்று இந்த திருநாகேஸ்வரம் […]

தேவி மஹாத்மியம்

தேவி மஹாத்மியம் 01 : மதுகைடப வதம் மார்க்கண்டேய மஹரிஷி கூறினார் “எவர் சூரிய குமாரனோ, எவர் ஸாவர்ணி என்கிற எட்டாவது மனுவாக கூறப்பட்டுள்ளானோ, அந்த மனுவினுடைய சரிதத்தை விரிவாகச் சொல்கிறேன், கேட்பீராக. ஸாவர்ணி மனு, மஹாமாயையினுடைய கருணையால் அனைத்து மந்வந்த்ரங்களுக்கும் அதிபரானார். முன்பு ஸ்வாரோசிஷன் என்ற மனுவின் கால முடிவில் சைத்ர வம்சத்தில் உதித்த, ஸுரதன் என்னும் அரசன் இப்பூமண்டலம் முழுமைக்கும் தலைவனாயிருந்தான். நாட்டு மக்களை தன் குழந்தைகளைப் போல பாதுகாத்து ஆட்சி புரிந்து வந்த […]

நவதுர்கா

சித்திதாத்ரி – 01 நவதுர்கா தேவியரின் தாத்பரியத்தில் கடைசி படிநிலை அன்னை சித்திதாத்ரி. சித்தி என்றால் பரிபூரண கடைசி நிலை வெற்றி, தாத்ரி என்றால் வழங்குபவர் என பொருள், ஆக பெரும் சித்திநிலை, இனி அடைய எதுவுமில்லை எனும் அந்த பரிபூரண நிலையினை அருள்பவள் அன்னை சித்தி தாத்ரி இது எந்த நிலை என்றால் ஏழு சக்கரம் துலங்கி, அதை அடுத்து சூட்சும உடலின் சக்கரம் துலங்கி அதனை அடுத்து பிரபஞ்சத்த்துடன் இரண்டற கலந்துவிடும் நிலை இதுதான் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications