பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நவபுலியூர்

நவபுலியூர் : 01 சிதம்பரம் நடராஜர் ஆலயம் நவபுலியூர் கோவிலில் முதல் கோவிலாக வருவது சிதம்பரம் நடராஜர் ஆலயம், நவபுலியூர் ஆலயங்களில் அது பெரும்பற்றபுலியூர் என அழைக்கபடுகின்றது இந்த ஆலயத்தின் சிறப்பினை அதன் மாபெரும் வரலாற்றினை எடுத்து சொல்லவேண்டுமென்றால் ஏடுகள் போதாது, அதனால் அதன் தாத்பரிய சிறப்புக்களை மட்டும் சுருக்கமாக பார்க்கலாம் அந்த ஆலயம் சங்க காலம் அல்ல வேத காலத்திலே தொடங்கிற்று, எந்த அளவு மிக மிக தொன்மையான ஆலயம் என்றால் புராணங்களிலும் இன்னும் வேத […]

பஞ்ச மயான தலங்கள்

பஞ்ச மயான தலம் 01 : கச்சி மயானம் காஞ்சிபுரத்தின் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அமைந்த்ருக்கும் ஒரு மகா முக்கிய சன்னதிதான் முதல் மயான தலம் இது காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் உட்புறத்தில் கொடிமரத்திற்கு வலப்புறம் மேற்கு நோக்கி தனி சந்நிதியாக அமைந்துள்ளது. இக்கோயில் மூலத்தானத்தின் மூலவராக, கச்சி மயானேசுவரர் எழுந்தருளி அருள் புரிகின்றார். இவருக்கு மயான லிங்கேசுவரர் எனும் மற்றொரு பெயருமுண்டு இந்த தலத்துக்கும் ஒரு புராணம் உண்டு, அதை பார்க்குமுன் இந்த பஞ்ச மயான தலங்களின் […]

பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள்

சப்த ரங்க ஆலயங்களை போலவே மார்கழியில் கூடுதலாக வழிபட வேண்டிய ஆலயங்கள் பஞ்ச கிருஷ்ண தலங்கள் ஐந்து தலங்களில் பகவான் கண்ணன் எப்போதும் தங்கியிருந்து அருள்வழங்குவார் என்பது அன்றே ரிஷிகளுக்கும் மகான்களுக்கும் அவர் கொடுத்த வாக்கு, அதாவது ஏதோ ஒரு காரணத்தை வைத்து அவர் எக்காலமும் எந்நேரமும் அருள் வழங்கும் முக்கியமான கிருஷ்ணன் ஆலயங்கள் இவை திருகோவிலூர், திருகண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருகண்ணபுரம் மற்றும் கபிஸ்தலம் வரும் நாட்களில் இந்த ஐந்து ஆலயங்களையும் ஒரு சுற்று பார்க்கலாம், மார்கழியில் […]

சப்த ரங்கம்

மார்கழி மாதம் பகவான் விஷ்ணுவுக்குரியது, பகவானுக்குரிய மாதமான அந்த தனுர் மாதத்தில் திருப்பாவை பாடுவதும், அதிகாலை கோலமிட்டு வழிபாடுகளை செய்வதும் இன்னும் ஏராளமான விரதம் நோன்புகள் இதர வழிகளில் பகவானை இடையறாமல் வணங்குவதும் நல்லது அதே நேரம் அந்த பகவானுக்குரிய, விஷ்ணு பகவானுக்குரிய ஆலயங்களை தேடி வணங்கி நின்றது சாலசிறந்தது முன்னோர்கள் கார்த்திகையில் சிவனை வழிபட சொன்னது போலவே மார்கழியில் விஷ்ணுவினை தவறாமல் வழிபட சொன்னார்கள், இந்த காலகட்டத்தில் சப்த ரங்க ஆலயங்கள் எனும் காவேரியின் இடையில் […]

தச வீரட்டானம்

அட்ட வீராட்டான தலங்கள் போலவே தச வீராட்டான தலங்கள் உண்டு, இந்த பத்து ஆலயங்களும் மேற்கு நோக்கி அமைந்த சிவாலயங்கள் மேற்கு நோக்கி அமைந்த சிவாலயங்கள் வெகு அபூர்வம், அதன் தாத்பரியம் ஆழமானது சனியின் திசை மேற்கு திசை, ஒருவரின் கர்மவினைக்கு கர்ம வினைபடியான வாழ்வுக்கும் சனிபகவானே அதிபதி, சனி ஒருவரின் ஜாதகத்தில் அவரவர் கர்மவினைக்கு தக்கவாறே பலனை வழங்கும் மேற்கு நோக்கி அமைந்திருக்கும் ஆலயங்கள் அந்த கர்மத்தை ஒருவன் சுமக்க வலுசேர்க்கும், அந்த கர்மத்தை சரியாக […]

திருமுருகாற்றுப்படை, சரஸ்வதி அந்தாதி நிறைவுக் குறிப்பு

திருமுருகாற்றுப்படை, சரஸ்வதி அந்தாதி என இரண்டையும் இன்று நிறைவு செய்துவிட்டோம் திருமுருகாற்றுபடை தமிழின் ஆதி முருகபக்தி இலக்கியம், அருணகிரிநாதரின் பாடல்கள் பிந்தியவை. நக்கீரரே காலத்தால் மூத்தவர் அவ்வகையில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு தலத்தை நினைந்து அல்லது அங்கு செல்லும் போது படிக்கவேண்டிய பாடல் இது, மிக்க பலன் உண்டு நல்ல பலன்களை தரும் அது கோர்வையான பாடல் என்பதால் 317 அடிகளையும் ஒரே பதிவு அல்லது சில பதிவுகளில் தரமுடியவில்லை நீண்டுவிட்டது, தொடர்ந்து வருபவர் கவனித்திருக்கலாம் […]

திருமுருகாற்றுப்படை : 20

301 முதல் 317 வரையான கடைசி வரிகள். ஆசினி முதுசுளை கலாவ மீமிசைநாக நறுமலர் உதிர ஊகமொடுமாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்றுமுத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்றுநன்பொன் மணிநிறம் கிளரப்பொன் கொழியாவாழை முழுமுதல் துமியத் தாழைஇளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புறமடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்கோழி வயப்பெடை இரியக் கேழலொடுஇரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்னகுரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம்பெருங்கல் விடரளைச் செறியக் கருந்கோட்டுஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்றுஇழுமென இழிதரும் அருவிப்பழமுதிர் சோலை […]

ஒரு சிறு குறிப்பு

ஒவ்வொரு நெல்லையனுக்கும் தாமிரபரணி, அகத்தியர், நெல்லையப்பர், திருசெந்தூர் நாதன், கொற்கை, ஆதிச்சநல்லூர், நின்றசீர் நெடுமாறன், குமரகுருபரர், நம்மாழ்வார், ஜடாவர்ம சுந்தரபாண்டியன், கட்டபொம்மன், புலித்தேவன், வாஞ்சிநாதன் , வ.உ.சி என பெரும் கர்வமான அடையாளங்கள் உண்டு அந்த ஞானகர்வ பாரம்பரியத்தில் வந்த எங்கள் பாரதிக்கும் மகத்தான இடம் உண்டு அவன் எங்கள் பெருமை, அவனின் நினைவுகளே எப்போதும் எம்மை வழிநடத்தும், அவன் எங்கள் ஞானகாற்று, தேச கங்கை நதி அவனை எப்படி நாம் மட்டம் தட்டுவோம்? பாரதி எம் […]

ஸ்வாமி சின்மயானந்தா

19ம் நூற்றாண்டு இந்துமதத்திற்கு சோதனைகள் அதிகம் உதித்த காலம், ஒரு பக்கம் கம்யூனிச நாத்திக கொள்கைகள் ஒருபக்கம் ஐரோப்பிய மதமாற்ற கொடுமைகள் அவர்களின் மேலாதிக்க மனப்பான்மை என இந்துமதம் மிகபெரிய சவாலை எதிர்கொண்டது ஐரோப்பியரின் மிகபெரிய ஆயுதம் கல்வி கூடங்களானது, ஆட்சி அவர்களிடம் சிக்கியது அதிகாரம் அவர்களிடம் சிக்கியது எனும் வகையில் அவர்கள் நினைத்த கல்வியினை அவர்களால் கொடுக்கமுடியும், அக்கல்வியில் இந்திய தேசபற்றோ இந்திய கலாச்சாரமோ இந்துமத பெருமைகளோ இருக்கும் என எதிர்பார்க்க முடியாது கல்வியில் மாற்றம் […]

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் அரவாணிகள் விழா

சித்ரா பௌர்ணமி பௌர்ணமிகளில் அது மகா முக்கியமானது. அந்த முழுநிலவு நாள் அன்று சில வழிபாடுகள் விசேஷமானவை. கண்ணகி கோவில் திருவிழா, கூவாகம் கோவில் அரவாணிகள் விழா அன்றுதான் நடக்கும். இதில் அந்த கூவாகம் விழா கொஞ்சம் கவனிக்க வேண்டியது, அது அரவாணிகளுக்கானது அரவாணிகளின் இன்றைய நிலை பரிதாபமானது, கொடூரமானது, நினைத்து பார்க்கவே கண்ணீர் பெருகும் மகா கொடுமையான வாழ்வு அது. உலகெல்லாம் எக்காலமும் அந்த தனி இனம் இருந்தது. மேற்காசிய பண்டை மதங்களில் கூட அதன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications