சித்தூர் சாஸ்தா கோவிலும் பங்குனி உத்திரத் தேரும்
வரலாற்றில் பாண்டிய நாட்டின் தென் எல்லை அடிக்கடி மாறிக் கொண்டே இருந்தது. சேரநாடு என்பது மலையினைத் தாண்டி களக்காடு, திருநெல்வேலி என பல இடங்களுக்கு நீண்டிருந்தது. கூன்பாண்டியன் எனும் நின்றசீர் நெடுமாற நாயனார் நடத்திய போர் அதனை சொல்கின்றது. அப்பொழுது நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகள் குமரி மாவட்டம் போலே சேர நாட்டுடன் இருந்தன. பழஞ்சி என்றால் கோட்டை எனப் பொருள். பெரும் பழஞ்சி சிறு பழஞ்சி எனும் அக்கால கோட்டை இருந்த ஊர்கள் பெருமளஞ்சி சிறுமளஞ்சி […]