பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காளிதாசனின் சாகுந்தலம் : 09

துஷ்யந்தன் அந்த கானகத்தின் ஆசிரமத்தை அரக்கரிடம் இருந்து காக்க வந்துவிட்டான் என்றதும் அந்த தவகுடில் மகிழ்ந்தது, மீண்டும் தர்ப்பை புல் சேகரித்தனர், யாக குண்டம் எழுப்பினர் எங்கும் உற்சாகம் கரைபுரண்டது அப்போது தர்ப்பைபுல் அறுக்க தயாரான பெண் சொன்னாள் “எவ்வளவு வியப்பு?, எவ்வளவு மகிழ்ச்சி?, வல்லாளன் வில்லாளன் துஷ்யந்தனே வந்து நமக்கு காவல் இருக்கின்றான், வலிமையின் மாட்சிக்கு சிகரமான அவனே வந்தபின் நம் பயம் எங்கே போயிற்று? முன்பு இந்த அரக்கரை கண்டால் புலிகண்ட மான்கூட்டம் போல் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 08

பாகனும் துஷ்யந்தனும் பேசிகொண்டிருக்கையில் ஏவலாள் வந்து மன்னனை வணங்கி இருமுனிவர்கள் அவனை தேடி காண வந்த செய்தியினை சொல்கின்றார்கள் காலத்தை கடத்திடாமல் அவர்களை உடனே வரசொல் என்ற மன்னன், அவர்கள் வந்ததும் எழுந்து வரவேற்றான் அவன் அழகையும் தோற்ற பொலிவினையும் கண்ட முனிவர் இன்னொருவரிடம் சொன்னார் “இவர் தேஜஸ் சூரியன் போல் தகதக்கின்றது ஆனால் கண்குளிர பார்க்கும் நிலவு போல் சுடர்விடுகின்றது தவயோகத்தில் நிறைந்து பழுத்த கணல் போன்ற மேனிகொண்ட முனிவர்க்கும் இவருக்குமான ஒற்றுமைகள் அதிகம், வேறுபாடு […]

காளிதாசனின் சாகுந்தலம் : 07

வேட்டையினை நிறுத்திய துஷ்யந்தன் தொடர்ந்து சொல்கின்றான். “கொடிய காட்டுத்தீ புயல் காற்றோடு சேர்ந்து சுற்றி வளைத்து எரிப்பதைப் போல, வேட்டைக்காக எந்த உயிரையும் தப்ப விடாதபடி காட்டை வளைத்த நம் படைகள் அதனை கைவிட்டு அமைதியாக திரும்பட்டும். சிங்கத்தின் கம்பீரம் போல் மாட்சிமை மிக்கவர்களும், சினம் தவிர்த்தவர்களுமான தூய துறவிகள் வாழுமிடம் இது. அவர்கள் கோபத் தீயினை மூட்டும் வண்ணம் எந்த செயலும் செய்ய கூடாது தளபதியே. துறவிகள் சினம் கொள்ளாதவர் போல் சாந்தமே உருவானவர்களாக தோன்றினாலும், […]

காளிதாசன் சாகுந்தலம் : 06

(இப்போது காட்சி கொஞ்சம் மாறுகின்றது, மன்னனை தேடி படைகள் வந்துவிட்டன, அதனால் தவசிகள் குடிலை விட்டு சற்று தள்ளி முகாம் அமைத்து தன் படைகள் மற்றும் சேவகர்களோடு தங்கியிருக்கின்றான் துஷ்யந்த மஹாராஜா அக்காலத்தில் காட்டின் மிருகங்களை கட்டுபடுத்தி மக்களை காக்கவேண்டியது அரச கடமை, இதனால் மன்னர்கள் தங்கள் பரிவாரங்களுடன் காட்டுக்கு செல்வார்கள், அந்த பரிவாரத்தில் சேவக பெண்கள் முதல் படைவரை எல்லாம் உண்டு அப்படி வந்த துஷ்யந்தன் ஒரு மானை விரட்டி இந்த தவசிகள் குடிலுக்கு வந்து […]

காளிதாசனின் சாகுந்தலம் : 05

சாகுந்தலையின் பூர்வீகம் குறித்து துஷ்யந்தன் கேட்க அதற்கு பதில் சொல்ல தொடங்கினாள் அனுசுயை “அய்யா, கௌசிக குலத்தில் வந்தவரும் பெரும் மன்னனும், கீர்த்திநிரம்பிய ராஜமுனிவராகவும் ஒருவர் இருக்கின்றார் அல்லவா? “ “ஆமாம், கேள்விபட்டது உண்டு” என்றான் துஷ்யந்தன் அனுசுயை சொன்னாள், “அவர்தான் எங்கள் அன்புக்குரியவளும் அழகு நிரம்பியவளுமான இந்த சகுந்தலையின் தகப்பனார், பெற்றெடுத்த தகப்பனார் . தவறவிட்ட அழகான மணிமாலை போல் தனித்துவிடபட்ட இவளை கன்வமுனிவர் எடுத்து வளர்க்கின்றார் , கேட்பாரற்று கிடந்த் ஒரு பெண்குழந்தையினை எடுத்துவளர்த்த […]

காளிதாசனின் சாகுந்தலம் : 04

சாகுந்தலை குனிந்து செடிகளுக்கு நீரூற்றும் அழகில் சொக்கிவிட்டான் துஷ்யந்தன், பொன்னிறமான அழகிய குட்டி மேகம் வானவில் மின்ன இறங்கி வந்து ஒரு செடிக்கு மட்டும் மழை பொழிவது போல் அவள் நீருற்றி கொண்டிருந்தாள. அவன் மயங்கி கொண்டிருந்தான் அந்த மயக்கத்திலே தன் குழப்பத்தையும் அந்த குழப்பத்தின் முடிவினையும் மனதிடம் சொன்னான் புயல்காற்று அலைகழித்த மரகலம் போல் அவள் அவனை உலுக்கியிருந்தாள், பெரிய அலை ஒன்று வீசியடித்த படகு கரையில் கிடப்பது போல் அவன் மனம் சலனற்று கிடந்தது […]

காளிதாசனின் சாகுந்தலம் : 03

“பாகனே , தன்னுள் இருக்கும் இறைவனை கண்டு அடைந்த முனிவர்கள் இருக்கும் இந்த குடிலை நான் சென்று அடைந்து, என்னை இழந்து இறைவனை அறிய முயல போகின்றேன்” என விடைபெற்ற துஷ்யந்தன் முனிவரின் குடில் நோக்கி சென்றான் இது துறவியரின் பூங்காவனம், துறவுநெறி சுரங்கம், இந்த இடத்துக்கு வந்ததே என் நல்வினை என்றபடி குடில் படியில் காவ்லைத்த அவன் ஒரு மாற்றம் உணர்ந்தான் ஆம், அவன் தன் வலது கண்ணும் வலது தோளும் துடிக்க கண்டான், அது […]

காளிதாசனின் சாகுந்தலம் : 02

அன்னை காளியின் புகழ்போல் மிகவும் பெரிதாகப் படர்ந்து உயர்ந்திருந்த ஹிமாலய மலை அது. அதன் உச்சியில் வெள்ளியினை உருக்கி ஊற்றி வைத்தது போல் பனிச் சிகரங்கள் மின்னிக் கொண்டிருந்தன‌. சூரியக்கதிர்கள் பட்டு அந்த மலைச்சிகரம் தங்கமாகவும் நவமணிகளாகவும் மாயமால ஜாலம் காட்டிக் கொண்டிருந்தது. பச்சை வர்ண புடவையினை சாற்றியது போல் மலை எங்கும் பசுமை சூழ்ந்திருந்தது. அமுதத்தை ஊற்றியது போல அருவிகள் வீழ்ந்து கொண்டிருந்தன. அந்த மலையின் எல்லா வளங்களையும் தான் சுமந்து மக்களுக்கு கொடுப்பதற்காக வார்த்தையால் […]

காளிதாசனின் சாகுந்தலம் – 01

முன்னுரை காளிதாசனின் மேகதூதம் கடந்த பதிவிலே முடிவு பெற்றுவிட்டது என்பதை தெரிவிக்கின்றோம். காளிதாசன் மேகத்திடம் தன் காதலி இருக்குமிடத்தையும் அதை அடையும் வழியினையும் சொல்லி அவளுக்கு சொல்லவேண்டிய செய்தியும் சொல்லி காவியத்தினை முடிக்கின்றார் காளிதாசர். அது மேகத்தின் வழி அழகான வர்ணனையுடன் பாரத தேசத்தின் வடபகுதியின் அழகைச் சொன்ன காவியம். வட பாரத மலைகள், நதிகள், நாடுகள் அப்படியே ஆலயங்கள், பண்டிகைகள், ஊர்கள் எனச் சொல்லி கயிலாயம் பற்றிச் சொல்லி மிக அற்புதமாக பாரதத்தை படம் பிடித்துக் […]

காளிதாசனின் மேகதூதம் : 13

பன்னிரெண்டாம் பத்து ஸ்லோகங்கள் “அன்பே, ஹிமாலயத்தில் இருந்து தெற்கே வரும் குளிர்ந்த காற்று நான் இருக்குமிடமும் வருகின்றது, அக்காற்று ஹிமாலயத்தின் தேவதாரு மரங்களின் தளிர்களை தொட்டு வரும், அப்போது அந்த மரங்களில் வடியும் பாலின் இனிமையான மணம் அதில் கலந்திருக்கும் அந்த இனிமையான மணத்தினை கொண்டு அக்காற்று ஹிமாலயத்தில் இருந்து வருவதை உறுதி செய்து கொள்கின்றேன், என் அன்பிற்கு எக்காலமும் உகந்த காதலியான‌ உன்னயும் அக்காற்று தழுவி வந்திருக்கும் என்பதால் அக்காற்றை ஆசையாய் தழுவுகின்றேன் என் அன்பே, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications