காளிதாசனின் சாகுந்தலம் : 10
காளிதாசனின் சாகுந்தலம் : 10 சாகுந்தலை தன் காதல் வரிகளை தன் தோழியருக்கு பாடிக் காட்டினாள். “இரக்கமிலாதவரே, உம்முன் நான் இரக்கம் வேண்டி நிற்கின்றேன், உலக உயிர்களை உறங்கவிடாத காமதேவன் என்னை உள்ளும் புறமும் எரிக்கின்றான்; தன் ஐந்து அம்புகளால் என் ஐம்புலன்களையும் அவன் அனலாய் அம்புகளால் வதைக்கின்றான். உங்கள் உள்ளத்தையோ நான் அறியேன். ஆனால், அவனோ உடலும், உயிரும், உணர்வும், சிந்தையும் நீங்களாக இருப்பதால் உங்கள் பொருட்டு என்னை காய்ச்சுகின்றான். அவன் பகலில் சூரியனின் கதிர்களால் […]