பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காளிதாசனின் சாகுந்தலம் : 33

காளிதாசனின் சாகுந்தலம் : 33 சொன்னவன் சாகுந்தலை முன் வெட்டிய மரம்போல் வீழ்ந்து கிடந்தான். அவன் கைகள் அவள் பாதம் பற்றின, தெய்வ விக்ரகமொன்று தன் முன் சாய்ந்து கிடப்பதைப் போல் பதறிய சாகுந்தலை மண்டியிட்டு தன் முகத்தை மூடிக்கொண்டே அழுதுச் சொன்னாள். “என் தெய்வமே என்ன செய்கின்றீர், என்னுடைய வல்வினையோ இக்கொடுமையெல்லாம் நான் காண்பது? என் வாழ்வே என் அன்பே இது தகுமோ, நான் மன்னிப்புக் கேட்க வேண்டிய இடத்தில் என்னைத் தேடிவந்து நீர் கேட்பதென்ன? […]

காளிதாசனின் சாகுந்தலம் : 32

காளிதாசனின் சாகுந்தலம் : 32 சாகுந்தலை தன் மகனையும் அந்தத் தாயத்தையும் தேடி வந்தாள், அவள் வரும்போதே அந்தத் தாயத்து இன்னொருவன் எடுக்க முயன்றும் உருமாறவில்லை என்பது சொல்லப்பட்டது, அவள் குழம்பினாள். “என் மகன் கையிலிருந்து விழுந்த தாயத்து அந்நியர் முன் நாகமாய் மாறியிருக்க வேண்டுமே? முனிவர் சொன்னபடி அது ஏன் மாறவில்லை. பசியடங்கிய புலிமுன் இட்ட உணவுபோல் அப்படியே கிடக்கும் மர்மம் என்ன? எப்போதுமே நான் வைக்கும் நம்பிக்கைகளாலே ஏமாற்றப்படுபவள் நான், இதுவும் அப்படித்தானோ. என் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 31

காளிதாசனின் சாகுந்தலம் : 31 சிங்கக்குட்டியினைக் கீழே விடாமல் விளையாடும் அச்சிறுவனைக் கட்டுப்படுத்தமுடியாமல் அந்தப் பெண்கள் பேசிக்கொண்டார்கள். “இவனை நம் வெற்றுச் சொற்களால் அடக்கமுடியுமா, கதிரவனைப் போர்வையால் போர்த்தமுடியுமா? மார்கண்டன் கொடுத்த அந்த அழகான மயில்பொம்மையினைக் கொண்டு வந்து கொடுப்போம், அப்போதுதான் இவன் இந்தச் சிங்ககுட்டிகளை கீழே விடுவான்” ஒரு பெண் அந்தப் பொம்மையினை எடுக்கச் செல்ல, அச்சிறுவன் சிரித்துக் கொண்டே சொல்கின்றான், ” போ.. போ நீ வரும்ரை இந்தச் சிங்ககுட்டியினை நான் விடமாட்டேன்” துஷ்யந்தன் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 30

காளிதாசனின் சாகுந்தலம் : 30 காசிப முனி தவமிருக்கும் கோலத்தைக் காண்கின்றான் துஷ்யந்தன், இந்த உலகமே பெறும் சக்தி இருந்தும், எல்லாம் வசப்படுத்தும் ஆற்றல் இருந்தும் அவர் அதையெல்லாம் தாண்டித் தவமிருக்கும் கோலம் கண்டு சொல்கின்றான். “கேட்டது எல்லாம் தரும் கற்பக மரத்தின் அடியில் எதுவும் கேட்காமல் தவமிருப்பதன்றோ ஞானம்? இவர் ஞானி. தாமரையின் இதழ்கள் வீழ்ந்து அதனால் பழுப்புநிறமாகக் கிடக்கும் இந்தத் தடாகத்தின் அருகே எந்த மாயையும் தன் மனதினைப் பழுப்பாக்காதபடி தெள்ளிய மனதோடிருக்கும் இவர் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 29

காளிதாசனின் சாகுந்தலம் : 29 தேவலோகம் சென்ற அந்தத் துஷ்யந்தனுக்குப் பெரும் வரவேற்பைக் கொடுத்தான் இந்திரன். மேள தாளங்கள், நடனங்கள் என அமர்க்களப்படுத்தி நெருங்கிய நண்பன் வந்ததைக் கொண்டாடினான். அதில் மிக நெகிழ்ந்த துஷ்யந்தன் மாதலியிடம் சொன்னான், “நான் சிறியதாக உதவினேன். இவரோ பெரிதாக எனக்குத் திருப்பிச் செய்கின்றார், நான் ஒன்றைச் செய்தால் அவர் நூறாகச் செய்கின்றார். தென்றல் போல நான் அவருக்குக் கொஞ்சம் உதவினேன், அவரோ புயலாக எனக்குத் திருப்பிச் செய்கின்றார், என்ன அவரின் பெருந்தன்மை? […]

காளிதாசனின் சாகுந்தலம் : 28

காளிதாசனின் சாகுந்தலம் : 28 “பிள்ளையில்லாக கொடியவனாகிவிட்டேன், என்னைப் பித்ரு எனச் சொல்லி எனக்கு எள்ளும் நீரும் இறைக்க வாரிசு இல்லையே, பெரும் அன்பும் கருணையும் கொண்ட இறைவன் எனக்கென இனி ஒரு வாரிசை தருவானோ? இந்நிலை என்றாகுமோ? இந்த கொடுங்கண்ணீரில் இருந்து மீள்வேனோ? கொடும்விதியில் பலியாகிவிடுவேனோ? சொன்னவன் அழுதான், அவனைத் தாங்கி ஆறுதல் சொன்னாள் சாதுரிகை. சானுமதி இதனைக் கண்டு வியந்து சொன்னாள், “என்ன இது, வியப்பின் ஏணிகளில் நான் வேகமாக ஏறிக்கொண்டிருக்கின்றேன். வியப்பின் மேல் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 27

காளிதாசனின் சாகுந்தலம் : 27 துஷ்யந்தன் மிக உருக்கமாக முகத்தில் ஒரு பரவசம் வர தன் கனவில் மூழ்கிச் சொல்லிக் கொண்டே இருந்தான். அவள் முகத்தை நோக்கி வந்து அமர்ந்த வண்டை என்ன செய்யபோகின்றேன் பார் எனக் கோபமாக சொல்லிக் கொண்டிருந்தான். அதை உடைக்கும் விதமாக சொன்னான் தோழன். “மன்னா, இது ஒரு ஓவியம்தான், அதற்கு ஏன் இவ்வளவு உணர்ச்சிகளைக் கொட்டுகின்றீர்கள்?” துஷ்யந்தன் சொன்னான் “ஓ, இதெல்லாம் கனவா, நண்பா நீ அந்தக் கனவைக கெடுத்துவிட்டாய்.. கனவெனும் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 26

காளிதாசனின் சாகுந்தலம் : 26 துஷ்யந்தன் அந்தப் படத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கே மூன்று பெண்கள் இருந்தார்கள், அதைக் கண்டு தோழன் கேட்டான். “மன்னா, இந்த ஓவியத்தில் மூன்று பெண்களுமே அழகு அல்லவா? இதில் தங்கள் உள்ளம் கவர்ந்த சாகுந்தலை யார்?” அதைக் கேட்ட சானுமதி சொன்னாள், “இவனுக்கு கண்ணில் என்ன குறைபாடோ தெரியவில்லை, அங்குத் தனி அழகு யார் என்பதைக் கவனிக்க முடியாமல் தவிக்கின்றான். வைரத்தின் இடையே கண்ணாடி கல்லை வைத்தால் விவரம் அறிந்தவனின்றி வேறு […]

காளிதாசனின் சாகுந்தலம் : 24

காளிதாசனின் சாகுந்தலம் : 24 சாகுந்தலையினை நினைந்தழுத துஷ்யந்தனின் நிலை கண்டு சானுமதி சொன்னாள். “தான் உடைத்த மணிமுடியின் மணிகளை ஒருவன் தானே சேர்க்க முயல்வதில் வியப்பில்லை, அழகிய மணிமுடியினை அவன் ஏன் உடைத்தான் என்பதே வியப்பு. அழகு மயிலொன்றை பிடித்த வேடன் அதன் இறகை எல்லாம் அது அழ அழ‌ பிடுங்கிவிட்டு,பின் மயிலின் அழகுக்காய் ஏங்குதல் வியப்பே” தோழன் சொன்னான், “மன்னா, தன் கணவனைத் தெய்வமென தொழுபவளை வேறு யார் தொடமுடியும் என்றீர், அது உண்மைதான் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 23

காளிதாசனின் சாகுந்தலம் : 23 விரக்தியில் இருந்த மன்னன் துஷ்யந்தனுக்கு அவனின் பணியாளனும் நண்பனுமானவன் நினைவுப்படுத்தினான். “மன்னரே, மல்லிகைப் பந்தல் ஒன்றில் நீங்களும் உங்கள் மனம்நிறை காதலியும் அமர்ந்திருப்பதைப் படமாக வரையவேண்டும் என ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னீர், ஓவியத்தில் வல்லவளான சதுரிகையாளும் தயாராகிவிட்டாள், மல்லிகைப்பந்தலும் தயாராகிவிட்டது. நீங்கள் அதை மறந்துவிட்டீரோ?” என்றான். துஷ்யந்தன் கொஞ்சம் வெறுப்புடன் சிரித்துச் சொன்னான். “எல்லாம் மறந்து நான் இழந்ததெல்லாம் போதாதா, இனி எல்லாமே மறக்காத காலம்தான், நான் மறக்கவில்லை, வா செல்லலாம்” […]