காளிதாசனின் மேகதூதம் : 06
ஐந்தாம் பத்து ஸ்லோகங்கள் “மேகமே, அடர்ந்த இரவில் வழி தெரியாமல் தடுமாறிய விலைமாந்தருக்கு நீ உன் மின்னலால் வெளிச்சம் கொடுத்து வழிகாட்டியதில் மிகவும் களைத்திருப்பாய், அதனால் உஜ்ஜைனி நகரின் மாடங்களில் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கோள் அந்நகரின் மாட மாளிகையில் புறாக்கள் கூடுகட்டி வசிக்கும், அவை உறங்கும் நேரம் நீயும் அங்கே கொஞ்சம் இளைப்பாறி களைப்பு நீங்கி எழுவாய், என் நண்பனான் நீ எனக்கு உதவி செய்யவேண்டி இருப்பதால் அதிகம் அங்கே தங்காமல் விரைந்து செல்ல முயலுவாயாக மேகமே, அந்நகரின் […]