பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இசைஞானியின் ஆன்மீகத்தேடல்

வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்குமான முதல் முறுகல் முதல்மரியாதை படம் வெளிவந்து அதற்கு தேசிய விருது கிடைத்ததில் தொடங்கிற்று விஷயம் ஒரு பத்திரிகையில் இளையராஜா எழுதிய தொடருக்கு வந்தது இளையராஜாவின் வார்த்தைகளுக்கு தேன் தடவி கொடுப்பது நான் என வைரமுத்தர் எங்கோ சொல்ல, இளையராஜா சீற வெடித்தது யுத்தம் “மெத்தை வாங்குனேன் தூக்கத்த வாங்கல” இதெல்லாம் வரியா? இசை இல்லாமல் எடுபடுமா என இளையராஜா சொல்லியதாக வைரமுத்து காதுக்கு போக வைரமுத்தர் உறும தொடங்கினார் இந்த காலகட்டங்களில் நடந்த ஒரு […]

எழுத்துச் சித்தர் பாலகுமாரனும் இசைஞானியும்

ஒரு சித்தனை இன்னொரு சித்தனேதான் அடையாளம் காண முடியும், இனம் இனத்தோடு என்பது அதுதான் பாலகுமாரனின் நினைலவலைகளில் இளையராஜாவினை பற்றிய வரிகளில் ஒன்று “இசைஞானி திரு. இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். வாழ்க நீ எம்மான். கரகரவென்று கண்ணில் நீர்வழிய நான் உட்கார்ந்திருந்த நிகழ்ச்சியும் நடந்தது. அது இளையராஜாவின் “ஹௌவ் டு நேம் இட்” கேசட் வெளியீட்டின் போது. எனக்கு இசையில் ஞானம் கிடையாது‌ காதுகள் மட்டுமே உண்டு. தேர்ச்சி கிடையாது. கொஞ்சம் பயிற்சி உண்டு. […]

வேலுதம்பி தளவாய்

பாரதம் எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்களை கொடுத்தது அதில் சேரநாடு எனும் கேரளநாட்டு வீரர்களும் இருந்தார்கள், கேரளம் தொடக்கத்தில் இருந்தே சுதந்திர நாடாக ஆப்கானியரோ இதர வெளிநாட்டவரோ ஆள அனுமதிக்கா பகுதியாகத்தான் இருந்தது, கேரள மன்னர்கள் அவ்வளவு கவனமாக இருந்தார்கள் இதனால்தான் மொகலாய ஆட்சியோ பிஜப்பூர் ஆட்சியோ அங்கு காலூன்றவில்லை அப்படியே அங்கு காலூன்ற முயன்ற போர்ச்சுகீசியன் வாஸ்கோடகாமாவும் அங்குதான் கொல்லபட்டான் அப்படிபட்ட கேரளாவில் பின்னாளில் குழப்பத்தை ஏற்படுத்தியவன் திப்பு சுல்தான், வடக்கே மராட்டிய இந்து பேரரசு […]

மூக்கையா தேவர்

கச்சத்தீவு விவகாரத்துக்குப் பின்னால் சீனாவின் ஆதிக்க அபாயம் இருக்கிறது என்பதை உணர வேண்டும். கச்சத்தீவை நாம் விட்டுத் தருவது இலங்கைக்கு அல்ல. சீன ஏகாதிபத்தியத்துக்கே என்பதை அறிய வேண்டும். கச்சத்தீவை நாம் கொடுத்துவிட்டால், திபேத் முதல் வங்கதேசம், இலங்கை வரையில் சீனாவின் ஆதிபத்தியம் விரிந்துவிடும். இந்தியா வகையாக சிக்கிக்கொள்ள நேரிடும் கச்சதீவு என்பது ராமநாதபுர மன்னரின் சொத்துக்கலில் ஒன்று, அப்படியானால் அது இந்திய மக்களின் சொத்து, அதனை இன்னொரு நாட்டுக்கு துக்கி கொடுப்பதை ஏற்கமுடியாது இது எங்கள் […]

வ.வே.சு அய்யர் எனும் வ.வே.சுப்பிரமணிய அய்யர்

அந்த மனிதனின் வாழ்க்கை தேச விடுதலைக்காக எப்படி எல்லாமோ திரும்பியது, யாரும் அனுபவிக்காத மிகபெரும் சிக்கலையும் துன்பத்தையும் அனுபவித்தான். நாடு ஒன்றுக்காக அவன் இழந்த வாழ்வும் ஏற்ற சிக்கல்களும் ஏராளம் ஆனால் வர்னாசிரமதர்ம வெறியன் என ஈரோட்டு ராம்சாமி பரப்பிய பச்சை பொய்யில் அந்த தேசபக்தனுக்கு இங்கு ஒரு அடையாளம் இல்லாமல் போயிற்று அந்த மனிதன் கட்டபொம்மனை போல் வாஞ்சிநாதனை போல் கொண்டாடபட வேண்டியவன், ஆனால் சுதந்திர போராளிகளை கொச்சைபடுத்தி இங்கு தேசியம் வளரகூடாது என சதிசெய்த […]

கோயமுத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள்

கோயமுத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் பீடம் சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் காலமாகிவிட்டார் என்பது அதிர்ச்சி செய்தி . அவர் இந்துமதத்துக்கும் இந்த தேசத்துக்கும் செய்த சேவைகள் எக்காலமும் நிலைத்து நிற்கும் மகா புண்ணிய பணிகள். பொதுவாக தமிழக ஆதீனங்கள் திராவிடத்துக்கு அஞ்சும் இயல்புடையவை, இந்துமதத்துக்கும் மக்களுக்கும் நாட்டுக்கும் என்ன நடந்தாலும் தன் பணி திராவிடத்துக்கு காவல் இருப்பவை ஆதீனங்களின் ஆதார கடமையே மதத்தை காப்பதும் பரப்புவதுமே என்பதை மறந்து, தங்கள் சுயலாபத்துக்காக எல்லாவற்றையும் விட்டுகொடுத்து மவுனம் காக்கும் இயல்பு […]

“திருநெல்வேலி வரலாறு” என்ற கால்டுவெல் புத்தகம்

கால்டுவெல் பற்றி கவர்னர் சொன்ன வார்த்தை சரியானது அவன் எந்த கல்வி கற்றான் என்பதை விட தமிழையே அவன் சரியாக படிக்கவில்லை என்பது நிஜம். அவன் தமிழை முழுமையாக கற்கவில்லை, தமிழ் உச்சரிப்பை கூட அவனுக்கு சொல்ல தெரியவில்லை. இது நாம் சொல்வது அல்ல அவன் எழுதிய நூலை படித்தாலே புரியும் “திருநெல்வேலி வரலாறு” என கால்டுவெல் எழுதிய புத்தகத்தை வாசியுங்கள், அவன் எப்படிப்பட்ட உளவாளி வேலை பார்த்திருக்கின்றான் என்பது தெரியும் கால்டுவெல்லுக்கு திருநெல்வேலி வரலாறே 1500ம் […]

வைத்தியநாதய்யரும் மதுரை ஆலய நுழைவும்

அந்நிய ஆட்சிக் குழபப்ங்களில் அவர்கள் கைகூலிகளின் அராஜகத்தில் மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்டோர் நுழைய சில தடைகள் இருந்தன. அங்கு மன்னர் காலத்தில் அப்படி அல்ல, நாயக்கர் காலத்தில் அல்ல, இக்குழப்பம் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில்தான் மர்மமாக வந்தது அந்த மர்மத்தின் பின்னால் மதமாற்ற தந்திரமும் இருந்தது, இந்துக்களுக்கு நெருக்கடி கொடுத்து மாற்றுமதம் தேடவைக்கும் ரகசிய தந்திரம் இருந்தது 1924ல் கேரள வைக்கம் கோவிலுக்கு சென்று கூட்டத்தோடு ஓரிருநாள் கத்திவிட்டு பின் தன்னை பெரும் சாதி ஒழிப்பு தலைவராக அடிபொடிகள் […]

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்

தமிழகத்தின் அடுத்த பெரும் திட்டமாக, அணுவுலைகள் மகேந்திர கிரி மையம், திருச்சி பெல், சென்னை ஆவடி, சூலூர் மற்றும் தாம்பரம் விமானபடைதளம், ஆவடி தொழிற்சாலை போன்ற பெரும் திட்டம் போல அடுத்த மகா முக்கிய திட்டத்தை தருகின்றார் மோடி. இதனால் தமிழக தென்மாவட்டங்கள் குறிப்பாக தேரிக்காடு என சொல்லப்படும் அந்த பின் தங்கிய வறண்ட பிரதேசங்கள் இனி வளர்ச்சியினை நோக்கி செல்லும். ஆம், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைவது உறுதியாகிவிட்டது, சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தபட்ட […]

ஞானசித்தர் – சுப்பிரமணிய பாரதியார்

காசி ஒரு புண்ணிய நகரம், அது மாபெரும் பிரபஞ்ச சக்தியினை தன்னுள் வைத்துகொண்டு இந்துஸ்தானத்துக்கான வழிகாட்டிகளை, மிகச் சரியான ஆற்றல் மிக்கவர்களை, இறைசக்தி தேடிக் கொண்டவர்களை எதிர்பார்த்து கொண்டே இருக்கும். உரிய காலத்தில் உரிய நபர் அங்கு கால் வைத்துவிட்டால் தன்னிடம் வந்து அமர்ந்துவிட்டால் எல்லா சக்திகளையும் ஞானத்தையும் அவர்களுக்கு அள்ளி கொடுத்து அனுப்பி வைக்கும். அதன்பின் அந்த பிறப்பு செயற்கரிய சாதனைகள் பல செய்து உயர்ந்து நின்று ஜோதியாய் வழிகாட்டும். வரலாற்றில் ஆதிசங்கரர் முதல் விவேகானந்தர், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications