காளிதாசனின் ரகுவம்சம் : 10
காளிதாசனின் ரகுவம்சம் : 10 சுதக்ஷனைக் கர்ப்பத்தின் அறிகுறியினைப் பிறர் அறியக் கண்டாள், உலக மக்கள் கண்களுக்கு பூரண சந்திரன் விருப்பமானது போல அரண்மனை மகளிர்க்கு அவள் மகிழ்வானாள், இஷவாகு வம்சம் தொடர்கின்றது என்பதன் அறிகுறியினை அவள் கொண்டிருக்க மன்னனும் மற்றவர்களும் மிகவும் மகிழ்ந்தார்கள். அவள் மெலிந்த தோற்றம் கொண்டாள், பலவீனத்தால் நகைகளை சுமக்க சக்தியற்றவளாய் மங்கலம் கருதி சிலவற்றை மட்டும் சுமந்தாள், லோத்ர மலர்போல் அவள் முகம் வெளிறிற்று, விடியும் காலையின் வானத்தில் நிலவும் விண்மீன்களும் […]