காளிதாசனின் சாகுந்தலம் : 24
காளிதாசனின் சாகுந்தலம் : 24 சாகுந்தலையினை நினைந்தழுத துஷ்யந்தனின் நிலை கண்டு சானுமதி சொன்னாள். “தான் உடைத்த மணிமுடியின் மணிகளை ஒருவன் தானே சேர்க்க முயல்வதில் வியப்பில்லை, அழகிய மணிமுடியினை அவன் ஏன் உடைத்தான் என்பதே வியப்பு. அழகு மயிலொன்றை பிடித்த வேடன் அதன் இறகை எல்லாம் அது அழ அழ பிடுங்கிவிட்டு,பின் மயிலின் அழகுக்காய் ஏங்குதல் வியப்பே” தோழன் சொன்னான், “மன்னா, தன் கணவனைத் தெய்வமென தொழுபவளை வேறு யார் தொடமுடியும் என்றீர், அது உண்மைதான் […]