முருகப்பெருமான் ஆலயங்கள் : இரத்னகிரி முருகப்பெருமான் ஆலயம்.
முருகப்பெருமான் ஆலயங்கள் : இரத்னகிரி முருகப்பெருமான் ஆலயம். வேலூர் மாவட்டம் இராணிபேட்டை அருகே அமைந்திருக்கின்றது இந்த ஆலயம். குன்று ஒன்றின் மேல் அழகுற எழுந்தருளியிருக்கும் இந்த ஆலயம் புராண காலத்துடன் தொடர்புடையது. அசுரனால் விரட்டப்பட்ட இந்திரன் இம்மலையில் ஒளிந்திருந்தான், அவனைக் காக்க வந்த முருகப்பெருமான் இந்திரனையே மயிலாகக் கொண்டு அசுரனை ஒழித்து அவனுக்கு மீண்டும் தேவலோகப் பதவியினை வழங்கினார். அதிலிருந்து இங்கு முருகப்பெருமான் ஆலயம் ஸ்தாபனமானது. இங்கு மலைப்பிளவில் தானே உருவான சுயம்பு விநாயகர் இன்னும் விசேஷம். […]