பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கந்தர்வ குரலோன் – எஸ்.பி. பால சுப்பிரமணியம்

கலைகள் என்பது தெய்வத்தின் வரம் எனச் சொல்லும் இந்துமதம், சில கலைஞர்களுக்கு கந்தர்வர்களின் அனுகிரகம் இருப்பதாக தன் ஞானத்தால் சொல்லும் அந்த அனுகிரஹம் பெற்றவர்கள் தொடும் கலை சிறக்கும், காலத்துக்கும் அவர்கள் நிலைப்பார்கள், எது மாறினாலும் அவர்களுக்கு கொடுக்கபட்ட வரம் மாறாது, அந்த கலை மாறாது. வாழும் காலமட்டும் அந்த கந்தர்வ அருள் அவர்களோடு இருக்கும், அந்த சக்தி அவர்களை பெரும் உச்சத்தில் வைத்து பெரும் ஜனவசியமும், மக்கள் அபிமானமும் கொண்டு நிறுத்தி வைத்திருக்கும். மிக சிலருக்கே […]

சதீஷ் தவான்

இந்தியாவின் விண்வெளி பலம் இன்று உலகை மிரட்டிக்கொண்டிருக்கின்றது. மாபெரும் வான்வெளி பலம் பெற்றிருக்கின்றோம். உலகின் எந்த இடத்தையும் தாக்கமுடியும், நிலவுக்கும் நம்மால் செல்லமுடியும். வானில் சுற்றும் செயற்கைகோள்களை கூட நம்மால் தகர்க்க முடியும். அசையும் இலக்கு, அசையா இலக்கு என நிலத்திலும் நீரிலும் வானிலும் உள்ள இலக்கை நம்மால் அடிக்க முடியும் அவ்வளவு பெரும் வான்பலம், ஏவுகனை பலம் இந்தியா பெற்றிருக்க அவர் மகத்தான காரணம்; அவராலேதான் தேசம் இந்தளவு பெரும் வல்லமை பெற்றிருக்கின்றது. ஒவ்வொரு இந்தியனும் […]

காலிஸ்தான்

கனடாவில் இருந்து சீக்கிய காலிஸ்தான் கும்பல் செய்த அட்டகாசம் ஏராளம். ஒருவகையில் இதற்கு காரணமே காங்கிரஸ்தான். அக்கட்சியும் அதன் முதலாளியான பிரிட்டிசாரும் செய்த குழப்பங்களே இந்த பெரும் குழப்பத்தின் முதல் காரணம். சீக்கியர்கள் வாளேந்த ஒரே காரணம் மொகலயத்தின் அட்டகாசம்; அதுவும் அவுரங்கசீப் காலத்தில் நிலைமை எல்லை மீறிச் செல்ல, அவர்களின் குருக்களெல்லாம் கட்டாய மதமாற்றத்தில் கொல்லப்பட, அப்போதுதான் படைதிரட்டி போராடினார்கள். நிச்சயம் அவர்கள் ராஜா ரஞ்சித்சிங் தலைமையில் போராடித்தான் மொகலாயத்தை, மராட்டியரோடு சேர்ந்து ஒடுக்கினார்கள். அந்த […]

வாழ்க நீ! எம்மான்!!! – மோடி

நரேந்திர மோடி என்பது தனிப்பெயர் மட்டும் அல்ல, நரேந்த்ர மோடி என்பது பாரத பிரதமரின் பெயர் மட்டுமல்ல, உலகை வசீகரிக்கும் மந்திர சொல் மட்டுமல்ல‌; நரேந்திர மோடி என்பது ஒரு உணர்வு, ஒரு எழுச்சிமிக்க மூச்சு, நம்பிக்கையும் உற்சாகமும் சிலிர்ப்பும் கொடுக்கும் நாமம், நரேந்திர மோடி என்பது ஆச்சரியம் கலந்த புன்னகை கொடுக்கும் பெரும் நிம்மதி உணர்வு. எதெல்லாம் இந்தியருக்கு குருடன் கண்ட கனவு போல வார்த்தையாக இருந்ததோ, எதெல்லாம் எம்மாலும் இதெல்லாம் சாத்தியமா என இருந்ததோ […]

சனாதன தர்மம் / ஹிந்து மதம்

சனாதன தர்மம் என்றால் மாறாதது நிலையானதுமான தர்மம் எனப் பொருள்,  இதன் பொருள் ஆழமானது. இது பற்றிய கொஞ்சம் ஆழமான புரிதல் அவசியம், இது பற்றி தெரிய ஸ்ருதி ஸ்மிருதி எனும் இரு தத்துவங்களுக்கான புரிதலும் அவசியம். ஸ்ருதி என்பது மாறாதது; ஸ்ம்ருதி என்பது மாற கூடியது. அதாவது காலத்துக்கும் மாறாதது ஸ்ருதி, காலம்தோறும் மாறிவருவது ஸ்ம்ருதி. இந்த பிரபஞ்சமும்,  பூமி ,  சூரியன்,  மழை, வெயில்,  உயிர்கள்,  மரம் செடிகொடிகள்,  மானிட உடல், வாழ்வு, வாழ்வின் […]

வரலெட்சுமி நோன்பு / வ்ரதம்

இந்து பெண்களின் மிக முக்கிய நோன்புகளில் ஒன்று வரலெட்சுமி விரதம். அது இன்று அனுசரிக்கப்படுகின்றது. உலகிலே பெண்களுக்கு உரிமை கொடுத்து, அவர்கள் தனித்துவமும் மகத்துவமும் பேண பல வழிகளை செய்த ஒரே ஒரு மதம் இந்துமதம். வேறு எங்கும் அப்படி ஒரு ஏற்பாட்டை பார்க்க முடியாது. இந்துமதம் அந்த சிறப்பை ஞானமாக செய்தது, பெண்கள் தனியாக கூடி வழிபடவும் கொண்டாடவும் அது பல பண்டிகைகளை செய்தது, முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கொண்டாடி வழிபடும் அளவு அது […]

கருட பஞ்சமி

இந்துக்களின் அடையாளங்களெல்லாம் ஞான குறியீடுகள், ஒவ்வொரு அடையாளமும் பெரும் ஞானத்தை குறிப்பது. நாகசதுர்த்தியும், கருடபஞ்சமியும் அப்படியானதே. இந்துக்களின் பெரும் அடையாளம் நாகம், அதுவும் படமெடுக்கும் நாகம். அது சிவனின் கழுத்தில் இருக்கும் முருகனின் காலடியில் கிடக்கும், விநாயகரின் இடுப்பில் கொடியாய் கிடக்கும், அப்படியே ஆயிரம் தலைகளுடன் பரந்தாமனுக்கு படுக்கையாய் சுருண்டிருக்கும். அதே நேரம் தெய்வங்களின் வாகனங்கள் என ஒவ்வொன்றை அடையாளப்படுத்தியது இந்துமதம், சிவனுக்கு காளையும், முருகனுக்கு மயிலும், பரந்தாமனுக்கு கருடன் என்றும் அது சொன்னது. தெய்வங்களுக்கு ஏன் […]

நாக சதுர்த்தி : 02

இந்திய ஆன்மீக லவுகீக‌ வாழ்வில் பசுக்கள் எப்படி முக்கியமோ, பசுக்கள் எப்படி கொண்டாடப்பட்டதோ, எப்படி வழிபாடு செய்யப்பட்டதோ அதன் அடுத்த இடத்தில் நாகங்கள் இருந்தன‌. நாக வழிபாடு என்பது இந்துமதத்தின் பெரும் அடையாளமாக இருந்தது, உலகம் முழுக்க இருந்த இந்துமதம் இந்துஸ்தானில் சுருங்கிய பின் அது இங்கே பிரதானமானது, சீனா போன்ற நாடுகளில் அது அடையாளமானது. பாம்பு நடனம் என அவர்கள் ஆடி தொடங்கும் புத்தாண்டு அவர்களின் வழிபாட்டு நிகழ்வு அன்றி வேறல்ல‌. இந்துமதம் நாகத்தை பிரதானமாக்கியது, […]

நாக சதுர்த்தி : 01

இந்துக்களைப் போல பிரபஞ்ச அசைவுகளை கவனித்தவர்கள் யாருமில்லை. மானிடரைத் தாண்டி எல்லா லோகங்களையும் அதன் இயக்கங்களையும் அங்கு வாழும் சக்திமிக்க வடிவங்களையும் தங்கள் ஞானத்தால் உணர்ந்தவர்கள் இந்து ரிஷிகள். தாங்கள் உணர்ந்ததை வேதமாக, உபநிஷமாக, புராணமாக எழுதிவைத்தார்கள், அத்தோடு அவர்கள் தங்கள் பணி முடிந்ததென விலகவில்லை. மானிடர்மேல் மிக மிக அன்புகொண்ட அவர்கள் இப்பூமியில் மானிடர் நலமாக வாழ பல இதர உலக சக்திகளின் உதவி அவசியம் என்பதை உணர்ந்து, அந்த சக்திகளின் ஆசியினை எப்படி மானுடன் […]

ஸ்ரீரங்கத்து தேவதை

இன்று உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்ற வெகு சில பெண்கள் உண்டு. அமெரிக்காவின் கமலா ஹாரீஸ் உள்ளிட்ட வெகு சிலரே அந்த இடத்தில் உண்டு, அப்படி சில அரசியல் பெண்களுக்குத் தனி செல்வாக்கு உலகில் உண்டு. அந்த வரிசையில் முதன் முதலில் ஒரு தமிழச்சி இடம் பிடித்திருக்கின்றார். உலகம் அவரை உற்று கவனித்து பல விஷயங்களில் பாராட்டிக் கொண்டிருக்கின்றது. அவர் திருச்சி தமிழச்சி, பின் வெளிநாட்டில் படித்து கணவருடன் பெங்களூரிலும் ஐதராபாத்திலுமாக‌ வசித்து, பள்ளி நடத்தியபொழுது சுஷ்மாவின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications