ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 06
“ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்ஒன்றாகி நிற்குஞ் சிவம்” இக்குறள் “ஒன்றே தான் ஊழி முதலாகி பல்லுயிருக்கும் ஒன்றாகி நிற்கும் சிவம்” என பொருள் தரும் ஊழிக்காலம் முடிந்து உயிர்கள் தோன்றுவது சிவம் எனும் மூலத்தில் இருந்தே, அதனால் எல்லா உயிர்களிலும் இருப்பது அந்த ஒரே சிவனே என்பது பாடலின் பொருள் ஊழிகாலத்தை பற்றி சொல்வது என்பது முடிவினை குறிப்பது, அதாவது சிவமே எல்லா யுகங்களின் தொடக்கமாகவும் இருக்கின்றார் முடிவுமாகவும் இருக்கின்றார், எல்லா உயிர்களும் அவரில் இருந்தே தொடங்குகின்றது […]