சூரசம்ஹாரம் : 02
வீரபாகு தூது செல்ல கிளம்பிய நேரம் சூரபத்மன் மாளிகை கொதித்தெழுந்தது, தாரகன் எனும் தன் தம்பியினை கொன்ற முருகனை பிடிக்க தன் சேனைகளுடன் தயாரானான் சூரபத்மன் ஆனால் அவனின் தம்பி சிங்கமுகனும் அவன் அமைச்சர் அமோகன் என்பவனும் நிதானமாக சில ஆலோசனைகளை சொன்னார்கள். “சூரபத்மா, யாராலும் கொல்லமுடியாத தாரகனை சிவமைந்தன் வீழ்த்தியிருக்கின்றான் என்றால் அவன் சாதாரணமானவனாக இருக்க முடியாது, ஒருவேளை சிவனே அவனை தூண்டிவிடுகின்றாரோ என்னவோ? நாம் அவசரபட்டு மோதுவதில் பலனில்லை ஒரு சிறுவனை ஏன் அனுப்பியிருக்கின்றார்கள் […]