பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 13 “கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்மற்றோ ரணிகலம் வேண்டாவாம் – முற்றமுழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரேஅழகுக் கழகுசெய் வார்” இவ்வரி “கற்றோருக்கு கல்வி நலனே கலன் அல்லால் மற்றொர் அணி கலம் வேண்டாவாம் முற்ற முழு மணி பூணுக்கு பூண் வேண்டா யாரே அழகுக்கு அழகு செய்வார்” என பிரிந்து பொருள் தரும் கற்றோருக்கு கல்வியே அழகு சேர்க்கும் அணிகலன் அது அன்றி இதர அணிகலன்கள் தேவையில்லை, முழுவதும் அழகு பூண்ட […]

மோடி தன் அன்னையின் 100ம் பிறந்தநாளில்

நேற்று மோடி தன் அன்னையின் 100ம் பிறந்தநாளில் அவர் பாதம் கழுவி நீர் அருந்திய காட்சி பலருக்கு ஆச்சரியமானது, சிலருக்கு நாடகமானது இன்னும் பலருக்கு ஆனந்தமானது உண்மையில் இதனில் ஆச்சரியபடவோ, வியக்கவோ இல்லை நாடகம் என சொல்ல்வோ எதுவுமில்லை. மோடி ஆர்.எஸ்.எஸ் வளர்ப்பு, அதன் பிரதான கொள்கை விவேகானந்தரை அப்படியே பின்பற்றுவது சுவாமி விவேகானந்தர் தன் புகழ்பெற்ற அமெரிக்க உரையில் சொல்கின்றார் “ஓ உலகத்தாரே, உலகில் இந்துக்கள் தங்கள் தாயினை பெருமைபடுத்தும் அளவு இன்னொரு மதம் பெருமைபடுத்திற்று […]

அக்னிபாத்

ஒவ்வொரு நாட்டுக்கும் ராணுவம் முக்கியம், பொதுவாக ராணுவத்தாருக்கும் ராணுவத்தில் இணையவேண்டும் என்பவருக்கும் நாட்டுபற்றும், கட்டுகோப்பும் இயல்பாக இருக்கும் இந்தியாவில் எங்களுக்கு அக்னிபாத் திட்டத்தால் ராணுவத்தில் இடமிருக்காது என ஒரு கோஷ்டி வன்முறையிலும் அழிச்சாட்டியத்திலும் ஈடுபட்டு இந்திய நாட்டின் சொத்துக்களையே அழிக்கின்றது, இது விசித்திரமானது மட்டுமல்ல முகமூடிகளை கிழிப்பதுமாகும் உண்மையில் ஒரு ராணுவவீரன் தன் நாட்டின் சொத்துக்களை காக்க எதிரிநாட்டு சொத்துக்களையும் வளங்களையும்தான் அழிப்பான், இவர்களுக்கு உண்மையிலே நாட்டுபற்றும் ராணுவம் மேல் அபிமானமும் இருந்தால் இந்த காரியங்களை செய்யமாட்டார்கள், […]

நெல்லை மண் என்பது உணர்ச்சியும், மானமும், அறிவும் நிரம்பியது. இந்திய விடுதலையின் அடுத்தகட்ட போர் அங்குதான் தொடங்கிற்றுபாண்டியன் காலம் தொட்டு அது வித்தியாசமான பூமி, ஏன் நாயக்கன் வரும்பொழுது கூட அவன் ஆட்சி நெல்லையில் பெரும் தாக்கமாக இல்லை நெல்லை அவர்களுக்கு சவால் கொடுத்திருக்கின்றதுநாயக்கமன்னர்களுக்கே வரிகொடுக்காமல் போராடிய பாண்டியமன்னரின் வாரிசுகள் உண்டு, இறுதிவரை அவர்கள் நிலைத்ததும் உண்டு.ஆர்காடு நவாபிற்கே வரிசெலுத்தாமல் பின்னாளில் ஆங்கிலேயரிடம் போராடிய பூலித்தேவன் ஆகட்டும், எமது உரிமைகளில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை என […]

நேஷனல் ஹெரால்ட் ஊழல் என்றால் என்ன என்பது இதுதான் நேஷனல் ஹெரால்ட் என்பது 1938ல் ஒன்றுபட்ட இந்தியாவின் சுதந்திரத்துக்காக தொடங்கபட்ட பத்திரிகை என சொல்லபட்டது, அதனை பாரதம் முழுக்க 5000க்கு மேற்பட்டோர் பங்குதாரர்களாக இருந்து உருவாக்கினார்கள் இதன் மொத்த பொறுப்பும் காந்தியிடம் உண்டு என சொல்லபட்டாலும் நேருதான் அதன் இயக்குநரும் தலைவருமாய் இருந்தார் அசோஸியேட்டட் ஜெர்னல்ஸ் எனும் கம்பெனியின் கட்டுபாட்டில் இந்த பத்திரிகை இருந்தது ஏகபட்ட சொத்துக்களை கொண்டவர், சொத்துக்களை எல்லாம் நாட்டுக்கே கொடுத்தவர் என கொண்டாடபடும் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 11

“இன்சொல்லன் றாழ்நடைய னாயினுமொன் றில்லானேல்வன்சொல்லி னல்லது வாய்திறவா-என்சொலினுங்கைத்துடையான் காற்கீ ழொதுங்குங் கடன்ஞாலம்பித்துடைய வல்ல பிற” இப்பாடல் “இன்சொல்லன் தாழ்நடை உடையவனாயினும் ஒன்று(ம்) இல்லானேல் வன் சொல்லின் இல்லது வாய் திறவா என் சொல்லினும் கை (பொருள்) உடையான் கால் கீழ் ஒதுங்கும் கடன் ஞாம் பித்துடைய அல்ல பிற” என பிரிந்து வரும் அதாவது ஒருவன் எவ்வளவு நல்லவனாய் இருந்தும் இன்சொல் பேசி அடக்கத்துடன் நடந்து கொண்டாலும் அவனிடம் பொருள் இல்லையேல் அவனை மற்றவர்கள் கடும் சொற்கள் […]

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 02

“பல்லூழி காலம் பயின்றனை யர்ச்சித்துநல்லுணர்வு பெற்ற நலம்” இக்குறள் “பல் ஊழி காலம் பயின்றனை அர்ச்சித்து நல்லுணர்வு பெற்ற நலம்” என பிரிந்து பொருள் தரும் நல்லுணர்வு எனும் மெய்ஞானம் பெற்று நலம் அடைவது என்பது ஒரே பிறவியில் வருவது அல்ல, அது பல யுகமான காலங்கள் செய்த தவத்தாலும் அர்ச்சனை எனும் மனதால் செய்யும் பூஜையாலும் வருவது ஒரே பிறவியில் தவம் கைகூடவில்லை என்றாலோ இறையருள் கிடைக்கவில்லை என்றாலோ கலங்க ஏதுமில்லை, மானிடரின் கடமை ஒவ்வொரு […]

ஜம்பு தீவு பிரகடன நாள்

1800களில் மொகலாயருக்கும் மராட்டிய பேரரசுக்கும் இடையே நடந்த தீரா போர்களிலும், சீக்கிய எழுச்சி மொகலாயருக்கு கொடுத்த அடியிலும் குழம்பி கிடந்தது பாரத கண்டம் இதனால் எல்லை பகுதியிலும் தொலைதூரத்திலும் குழப்பம் நிலவிற்று அந்த குழப்பம் ஆங்கிலேயருக்கு சாதகமாயிற்று, ஆற்காடு நவாப் வழியாக தமிழகத்தில் ஊடுருவினார்கள், அக்காலத்தின் குழப்பம் அவர்களுக்கு சாதகமாயிற்று மொகலாயரின் சரிவுக்கு பின் அவர்கள் பிரநிதிகளான ஆற்காடு நவாபுக்கு தமிழக இந்து மன்னர்களும் நாயக்கர்களும் அடங்கமறுக்க போர்கள் வெடித்தன, சில போர்கள் நவாப் குடும்பத்துக்குள்ளே வெடித்தன‌ […]

அடுத்த இந்திய குடியரசு தலைவராக யாரை நியமிக்கலாம் என்பதில் பெரும் குழப்பம் நிலவுகின்றது, இது பாஜக தாண்டி எல்லா கட்சியும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு என்பதால் பாஜவுக்கு எதிர் தலமை யார் என்பதை காட்டும் வாய்ப்பாக எதிர்கட்சி கோஷ்டிகளில் பல தலைவர்கள் கருதுகின்றார்கள் இந்த திருநாட்டுக்கு உயிரை பணயம் வைத்த ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் உண்டு, வாழ்வையே அர்பணித்த விஞ்ஞானிகள் உண்டு இன்னும் பெரும் தியாக வாழ்வு வாழ்ந்துவிட்டு அமைதியாக இருப்பவர்கள் உண்டுஅவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து […]

இந்த பேரரிவாளன் விவகாரம் மட்டுமல்ல

இந்த பேரரிவாளன் விவகாரம் மட்டுமல்ல தங்கள் இலங்கை நிலைபாட்டிலே மத்திய அரசு வெளிபடையாக இருத்தல் வேண்டும் தங்கள் திட்டத்தை தமிழக மக்களுக்கு சொல்லவேண்டும் காங்கிரஸ் அரசு அதை செய்யாததால்தான் பெரும் குழப்பம் ஏற்பட்டது இப்பொழுது பாஜக அரசு அதையே செய்வது போல் தோன்றுகின்றது, அப்படி செய்தால் அது பெரும் குழப்பமாக முடியும் பாஜகவுக்கு இவ்விவகாரத்தில் சில வெளிபடைதன்மை அவசியம் ஈழவிவகாரம் தமிழகத்தில் 1983க்கு முன்பு கிடையாது, வரலாற்றில் ஈழதமிழருக்கும் தமிழக தமிழருக்கும் ஒரு இடைவெளி பெரிதாக இருந்திருக்கின்றது, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications