03. அமர்நீதி நாயனார்

“அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்” சுந்தரமூர்த்தி நாயனார் மெல்லிய இதழ்களோடு கூடிய மெல்லிய முல்லை மலர் மாலையைச் சூடிய அமர்நீதி நாயனார்க்கு அடியேன் என்கின்றார் சுந்தரமூர்த்தி நாயனார் யார் இந்த அமர்நீதி? அக்கால‌ சோழவளநாடு எல்லா வகையிலும் செழிப்பாய் இருந்தது, காவேரி நிலத்தை இருபோகம் விளையச் செய்து விளைச்சலில் பலன் கொடுத்தது, இன்னொரு வகையிலும் சோழநாட்டுக்குப் பணம் கொட்டியது . அது வியாபார சமூகத்தின் உழைப்பு. அன்று எந்த நாட்டிலும் இல்லாத செல்வம் சோழநாட்டில் கொட்டிக் கிடக்க […]