காளிதாசனின் சாகுந்தலம் : 09
துஷ்யந்தன் அந்த கானகத்தின் ஆசிரமத்தை அரக்கரிடம் இருந்து காக்க வந்துவிட்டான் என்றதும் அந்த தவகுடில் மகிழ்ந்தது, மீண்டும் தர்ப்பை புல் சேகரித்தனர், யாக குண்டம் எழுப்பினர் எங்கும் உற்சாகம் கரைபுரண்டது அப்போது தர்ப்பைபுல் அறுக்க தயாரான பெண் சொன்னாள் “எவ்வளவு வியப்பு?, எவ்வளவு மகிழ்ச்சி?, வல்லாளன் வில்லாளன் துஷ்யந்தனே வந்து நமக்கு காவல் இருக்கின்றான், வலிமையின் மாட்சிக்கு சிகரமான அவனே வந்தபின் நம் பயம் எங்கே போயிற்று? முன்பு இந்த அரக்கரை கண்டால் புலிகண்ட மான்கூட்டம் போல் […]