ஃபீனிக்ஸ் பறவை வடிவில் ஜெயலலிதா நினைவிடம்
ஃபீனிக்ஸ் பறவை வடிவில் ஜெயலலிதா நினைவிடம்
சூரியனை அடைவேன் என அதைநோக்கி பறந்து தன் இறகு எல்லாம் விழுந்து பூமியில் விழுமாம் அந்த பறவை
சூரிய வெப்பத்தில் இறகுகள் எரிய வீழ்ந்து கிடக்குமாம், அந்த சாம்பலிலே தவம் இருக்குமாம்
பின் மறுபடி இறக்கை கிடைத்தபின் பறக்குமாம்
இறுதிவரை அது சூரியனை நெருங்கவும் முடியாது, அதனை வெல்லவும் முடியாது
அந்த கற்பனை பறவை பற்றி மேல்நாட்டு இலக்கியம் இப்படித்தான் சொல்கின்றது
உதய சூரியனை நோக்கி பறந்தே தன் அரசியல் வாழ்வினை நடத்தியவர் ஜெயா என்பதால் அந்த பறவை சின்னம் சால சிறந்தது
ஏம்பா அடிமைகளா, திமுகவினர் இனி எப்படி எல்லாம் கலாய்ப்பார்கள் தெரியுமா?
பீனிக்ஸ் பறவையின் கதையே சூரியன் இல்லாவிட்டால் சாத்தியமில்லை என யோசித்தால் இப்படி செய்வீர்களா?
ஆக உதய சூரியனுடன் மோதி அம்மா வீழ்ந்தார் என்பதை சிம்பாலிக்காக சொல்ல வருகின்றார்கள் இவர்கள்
அந்த அம்மாவிற்கு எவ்வளவு பெரும் அவமானம் ஏற்படுத்திவிட்டீர்கள்?
உங்களை எல்லாம் அந்த அம்மா ஏன் காலில் போட்டு மிதித்தது என இப்பொழுதுதான் புரிகின்றது
ஒருவேளை மிதிவாங்கிய வன்மத்தில்தான் சூரியனிடம் தோற்ற பீனிக்ஸ் பறவை இங்கு உறங்குகின்றது என சூசகமாக சொல்கின்றார்களோ என்னமோ?
அடிமைகளா, பீனிக்ஸ் பறவை என்றால் ஏதோ வேடந்தாங்கல் பறவை என நினைத்தீர்களா?
அந்த யாரும் பார்க்கா கற்பனை பறவை , டிராகன் போன்ற பழங்கான உயிரினம் அதன் தமிழ்பெயர் என்ன தெரியுமா?
ஊழிக்கால பறவை, அதாவது அழிவுக்கால பறவை
தமிழ்நாட்டை அம்மா அழித்தார் என்று ஒப்புகொள்கின்றீர்கள் அல்லவா?, இந்த பெருந்தன்மை யாருக்கு வரும்