அகில உலக சமூக அநீதியால் பாதிக்கட்ட நாம் கேட்டு கொள்கின்றோம்

நிலத்தை பிடுங்கி நிலமில்லாதவனுக்கு கொடுக்க கிளம்பியிருக்கும் கோஷ்டிகளிடம் ஒன்றே ஒன்றுதான் கேட்கின்றோம்

எமக்கு இந்த வேலையினை விட்டால் பிழைப்பு இல்லை, ஆனால் இந்த ஜப்பானிய முதலாளி கம்பெனியினை அவனே வைத்திருக்கின்றான், சம்பளம் மட்டும் தருவானாம்

வேலை செய்யாவிட்டால் சம்பளமும் கிடையாதாம்

இந்த கம்பெனி அவன் தாத்தாவிடம் இருந்து அவனுக்கு வந்ததாம், அவனுக்கு பின் அவன் மகனுக்காம்

ஆனால் நாம் மட்டும் உழைப்பாளியாகவே இருக்க வேண்டுமாம், கைகட்டி வாய்பொத்தி நிற்கவேண்டுமாம் , இல்லாவிட்டால் விரட்டி அடித்துவிடுவானாம்.

இந்த அகில உலக சமூக அநீதியினை எதிர்த்து போராடி இந்த கம்பெனியில் எமக்கொரு கனிசமான‌ பங்கு வாங்கி தரும்படியும் முடிந்தால் இந்த கம்பெனியினையே மீட்டு என் பெயருக்கு தரும்படியும் அகில உலக சமூக அநீதியால் பாதிக்கட்ட நாம் கேட்டு கொள்கின்றோம்