அக்கடா இக்கடா செய்திகள்

பதிவு ஏதும் தாமதமானால் பேப்பர் போடும் பையனை மிரட்டுவதை போல அதட்டுகின்றார்கள்

இனி தாமதிக்கும் நேரமெல்லாம் பதிவினை போடுகின்றாயா இல்லையா என கல், உருட்டுகட்டை எல்லாம் எடுத்துவிடுவார்கள் என்பது தெரிகின்றது.

எதற்க்கும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்


காவேரி விவகாரம் தொடர்பாக மோடியிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை : முதல்வர் பழனிச்சாமி

மோடி எந்த காலத்தில் அய்யா காவேரி வரும் என சொன்னார்?

நீதிமன்றத்தில் மத்திய அரசு 2 வாரம் அவகாசம் கேட்டது மோடி குரலா? அத்வாணியின் குரலா?

ஆனாலும் இப்பொழுதெல்லாம் பழனிச்சாமிக்கு மிக தைரியம், அதுவும் மன்னார்குடி குடும்பம் குத்துவெட்டில் இறங்கி இருக்கும்பொழுது மனிதர் மகா தைரியமாக இருக்கின்றார்


திமுகவுடன் கூட்டணி ஏன் : வைகோ விளக்கம்

இதில் என்ன மண்ணாங்கட்டி விளக்கம்?

மு.க ஸ்டாலினை தலையில் துண்டுபோட்டு முக்கில் வைக்க மனிதர் கூட்டணிக்கு வந்திருக்கின்றார் என்பது யாருக்கு தெரியாது?


சர்ச்சைகுரிய விஷயங்களை பேசிவரும் திரிபுரா முதல்வரை உடனே சந்திக்க அழைப்பு விடுத்தார் மோடி, கண்டிக்க அழைப்பதாக செய்திகள்

அதானே சர்ச்சைகுரிய பேச்செல்லாம் பேச மோடி, எச்.ராசா, தமிழிசை அமித்ஷா, மகேஷ் சர்மா, யோகி என சிலர்தான் கட்சியில் லைசென்ஸ் வாங்கியிருக்கின்றார்கள்

பின் இவர் எப்படி சர்ச்சையாக பேசலாம்? பேசினால் அவர்களுக்கு என்னதான் மரியாதை?


எனக்கு லஞ்சம் கொடுக்க ஸ்டெர்லைட் கம்பெனி முன்வந்தது : பொன்னார் போனவாரம்

ஸ்டெர்லைட் கோடிக்கணக்கான முதலீடு கொண்டது, உடனே மூட முடியாது : அதே பொன்னார் இந்தவாரம்

ஒருவாரத்தில் என்ன நடந்திருக்கும்?

ஒருவேளை ஏதும் கேட்க வேண்டியதைத்தான் அன்னார் “எனக்கு லஞ்ச வாய்ப்பு வந்தது”, என திரும்ப திரும்ப சொன்னாரோ?

இது என்ன புது வகையான டெக்னிக்? குஜராத் மாடலாக இருக்குமோ??

மனிதர் தமிழக அரசியல்வாதிகள் அனைவரையும் ஒரே நாளில் புரட்டி போட்டு எங்கோ போய்விட்டார்