அக்கட்சியின் எதிர்காலம் என்னாவது?

திமுக சார்பில் பெண் உறுப்பினர்களை விவாதங்களுக்கு அனுப்பும் காட்சி இப்பொழுதெல்லாம் இல்லை

மங்குனி மனுஷும் இன்ன பிற இம்சைகளுமே சுற்றி சுற்றி திரிகின்றன‌

திமுக மகளிர் அணியில் கனிமொழி ஒருவரே உள்ளது போலவும் அவர் டெல்லிக்கு சென்றபின் இங்கு யாருமே இல்லை என்பது போலவும் காட்சிகள் இருப்பது சரியல்ல‌

கனிமொழி இனியொரு பெண் குழந்தையினை தத்தெடுத்து அதற்கு பாப்பாநிதி என பெயரிட்டு அதை மகளிர் அணி தலைவி ஆக்குவதெல்லாம் முடியாத கதை

திமுகவின் மகளிர் அணியில் சிலரை தேர்ந்தெடுத்து ஆரோக்கியமான வாதங்களுக்கு அனுப்பலாம், திறமையானோர் பலர் உண்டு

ஆனால் ஏன் செய்யவில்லை என்பதுதான் தெரியவில்லை

திமுக ஆண் உறுப்பினரெல்லாம் ஸ்டாலின் முகத்தையும் பெண் உறுப்பினரெல்லாம் கனிமொழி முகத்தையுமே பார்த்துகொண்டிருந்தால் அக்கட்சியின் எதிர்காலம் என்னாவது?