அக்கால ராஜநீதியால் நிகழ்ந்த விஷயங்கள்
உடன்கட்டை ஏறுதல், முலைவரி, தேவதாசி முறை எல்லா இந்துக்களின் அங்கம் என்பது அதன் எதிர்ப்பாளர்கள் சொல்லும் சில பழிகள்
உண்மையில் உடன்கட்டை ஏறுதலை எந்த சட்டமும் இந்து தர்மமும் எழுதிவைக்கவில்லை, அதில் இருவகை இருந்தன
“கணவனை இழந்தோருக்கு காட்டுவது இல்..” என்பது அந்த வாக்கியம், கணவனை இழந்த மனைவி வாழ விரும்புவதில்லை, மன்னனிடம் நீதிகேட்ட கண்ணகியே மதுரையினை எரித்து தானும் எரிய விரும்பியதாகவும் ஆனால் தீ சுடாமல் விட்டதாகவும் சில தகவல் உண்டு
அவள் மதுரையினை எரித்தது அப்படித்தான், அதாவது கணவனின் தீயில் தானே எரிந்த பெண்கள் உண்டு
இன்னொன்று அந்நிய படையெடுப்பின் கணவன் இறந்தபின் தனக்கு பாதுகாப்பில்லை என உணர்ந்த பெண்கள் செத்துவிடும் கொடுமையும் நடந்தது
இந்த விவகாரம் சில இடங்களில் திசைமாறி சென்றது, அது மிக சில இடங்களே
ஆயினும் அதை தடுத்து நிறுத்தியது ராஜாராம் மோகன்ராய் என்ற இந்து, ஆம் ஒரு இந்துதான் அந்த சீர்திருத்ததை செய்தான்
அவன் ஒரு பிராமணன் என்பது குறிப்பிடதக்கது..
இந்த முலைவரி, மேலாடைக்கு வரி என்பதன் அடிப்படை தன்மையே வேறு, அது இந்து தர்மமோ அல்லது சட்டமோ அல்ல
அது ஒருவகையில் சாதிய கொடுமையும் அல்ல, அதன் பின்னால் இருந்த ஆட்சியின் பயம் வேறு
அது அரசியல்,
ஒரு நாட்டில் குடியேற்றவாசிகள் அதாவது இன்னொரு நாட்டு இனம் பிழைக்க வரும்பொழுது அந்நாடு மிககவனமாய் இருக்கும், வந்தவர்கள் தங்களை அடக்கி ஆள கூடாது எனும் விழிப்பு அது
அது பைபிளில் எகிப்தியர் யூதருக்கு செய்த கொடுமையில் தொடங்கி ஹிட்லர் யூதருக்கு செய்தது, இலங்கை மலையக தமிழருக்கு செய்தது என தொடர்ந்து வரும்
அப்படித்தான் திருவாங்கூர் சமஸ்தானம் அங்கு குடியேறிய மக்களை அடிமைபடுத்தி வைக்க பல கட்டுபாடுகளை விதித்தது, அதில் ஒன்றுதான் அவர்கள் கையில் பணமே தங்க கூடாது எனும் தந்திரம்
கையில் காசுதங்கினால் அந்த இனம் இடம் வாங்கும் , பொருள்வாங்கும் படை சேர்க்கும் ஆளும், விடலாமா?
பிழைக்க வந்து உழைத்து குவிக்கும் அந்த இனத்திடம் ஒரு காசு தங்க கூடாது என திட்டமிட்டார்கள், தேர்ந்த தந்திரமும் அந்நாளைய உலக வழக்கமும் அது
இதனால் வரி என கறந்தார்கள், அன்று மேலாடை துறப்பு என்பது அடிமைகளுக்கானது இன்னொன்று கேரள சுந்தரிகளின் மேலாடை உலகறிந்தது
கேரள வம்சாவளி பெண்களுக்கும் நாட்டில் குடியேறிய அந்நிய பெண்களுக்குமான வித்தியாசமாக மேலாடை விவகாரம் வந்தது
அடிமைக்கு ஏன் மேலாடை என பாரத்திலே காட்சி வரும் அல்லவா?
அதுதான் திருவாங்கூரில் அரங்றேறிற்று
வரி என்பதை எதில் எல்லாம் விதிக்கமுடியுமோ அதில் எல்லாம் விதித்து அம்மக்களை அடக்கி வைத்தது திருவிதாங்கூர் சமஸ்தானம்
அந்த கொடுமையினை எதிர்த்து வெற்றி கண்டவர் அய்யா வைகுண்டர் அவரும் ஒரு இந்து..
தேவதாசி முறை பற்றி நாம் நிறைய சொல்லியாயிற்று, அக்காலத்தில் பெண்கள் எல்லா மதத்திலும் ஆலய உதவியாளராய் இருந்தனர், இயேசுவின் தாய் மரியாள் கூட அந்த தேவாலயத்து ஊழியக்காரி
இன்றும் புனிதமான கன்னியாஸ்திரிகள் கிறிஸ்துவத்தில் உண்டல்லவா? அப்படி இந்துக்களில் தேவதாசிகள் இருந்தார்கள்
அடிமை முறை உச்சத்தில் இருந்த காலத்தில் அவள் கடவுளுக்கு மட்டும் அடிமை என பொருள்படும் தேவதாசி என பெயர் சூட்டினர்
தேவதாசி வேறு கணிகையர் வேறு
ஆண்டாள் வேறு , மாதவி வேறு
அப்பெண்கள் தெய்வத்துக்கு சமமாக மதிக்கபட்டானர் கொண்டாடபட்டனர், ஆலயத்தில் பூ அலங்காரம், சுத்தபடுத்துதல் , பாடல் , இசை உட்பட எல்லா வேலைகளையும் அவர்களே செய்தனர்
மன்னன் ஆட்சி வரை சிக்கல் இல்லை
மன்னர்கள் சரிய ஆரம்பித்ததும் தேவதாசிகளின் வாழ்வு சரிந்தது, புனிதமான அந்த நதி சாக்கடையில் கலந்து என்னமோ நடந்தெறிற்று
ஆக உடன்கட்டை ஏறுதல், முலைவரி, தேவதாசி எல்லாம் இந்து தர்மமும் அல்ல, சட்டமும் அல்ல
பெண்களை அப்படி அம்மதம் கொடுமைபடுத்தவும் இல்லை
அக்கால அரசியல், சமூகம் ,மன்னர் ஆட்சி, அரச நீதி,போரின் விளைவுகள் என எல்லாவற்றாலும் எழுந்த விளைவுகள் அவை
புனிதமான இந்துமதம் இந்த கொடிய விஷயங்களை எல்லாம் போதிக்கவில்லை, அப்படி செய்யவும் செய்யாது
எல்லாம் ஆட்சியாளர்கள் மற்றும் அக்கால ராஜநீதியால் நிகழ்ந்த விஷயங்கள், இந்து மதத்திற்கும் அவற்றுக்கும் தொடர்பில்லை