அங்கிள் சைமனார் தன் மகனின் பிறந்த நாளில் “ஹேப்பி பேர்த் டே” என பாட்டுபாடியது வைரலாகின்றது
அங்கிள் சைமனார் தன் மகனின் பிறந்த நாளில் “ஹேப்பி பேர்த் டே” என பாட்டுபாடியது வைரலாகின்றது
அங்கிள் அதை செய்யாவிட்டால்தான் ஆச்சரியம், அப்படித்தான் செய்வார்
முன்பு ஒரு வீடியோவில் அங்கிள் சொன்னது இதுதான்
“தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுபவன சும்மா விடமாட்டேன், கட்டி வச்சி திருக்கை வால் , பனைமட்டை வச்சி அடிச்சி தோலை உரிச்சி, உப்பு வச்சி தேச்சி , தொலைச்சிபுடுவேன் பூரா பயலையும்…..”
ஆங்கிலத்தில் பேசினாலே அப்படி என்றால், பாட்டாகவே பாடினால் எப்படி விடமுடியும்?
அங்கிள் சட்டையினை கழற்றிவிட்டு தும்பிகளிடமோ இல்லை மன்சூர் அலிகானிடமோ முதுகினை கொடுத்தால் நல்லது
இல்லாவிட்டால் தமிழகம் கிடைத்த இடத்தில் முதுகை உரித்தே விடும்.
திருக்கை வாலும் உப்பும் வைத்து கொண்டு சைமனுக்காக காத்திருக்கின்றது தமிழகம்,
பச்சை மட்டை எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டி கொள்ளலாம்