அங்கும் இங்கும் …..

மக்கள் சூப்பர் ஸ்டார் சர்ச்சை: மன்னிப்பு கோரினார் இயக்குநர் லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் பட்டம் என்ன ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் வாங்கும் பட்டமா? அதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்

மக்களை ஆளும் பொறுப்பான முதல்வர் பதவியினையே “மக்கள் முதல்வர்”, “மக்கள் எதிர்கட்சி தலைவர்”,”மக்கள் சபாநாயகர்” என ஏக டைட்டில் போடும் மாநிலம் இது

அவ்வளவு ஏன் புரட்சி தலைவன், தலைவி என வெத்துவேட்டுக்களே பட்டம் சூட்டிகொள்ளும் நாடு இது, எவனாவது புரட்சி தலைவன் என்றால் லெனின், மாவோ என கண்டித்தானா? இல்லவே இல்லை

அந்த புரட்சி தலைவன் பட்டமே படாதபாடு பட்ட மாநிலத்தில் சூப்பர் ஸ்டார் பட்டம் மட்டும் கிழிபட கூடாதா? என்ன கொடுமை இது

இப்படியும் ஒரு சமூகம் இருக்குமா?

இதில் சூப்பர்ஸ்டார் பட்டம் எந்த கோமாளியும்
போட கூடாதா? அது என்ன ரஜினிக்கே சொந்தமா? அப்படி அவர் என்ன கிழித்துவிட்டார்?

ரஜினி ஒரு காமெடியன் அவருக்கே சூப்பர் ஸ்டார் பட்டமென்றால், புதிதாக அரசியல் காமெடி செய்ய புறப்பட்டிருக்கும் லாரன்சுக்கு மக்களின் சூப்பர்ஸ்டார் எனும் பட்டம் சரியாதாகவே இருக்க முடியும்.

சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது ஒரு கோமாளி பட்டம், அதனை யாருக்கு சூட்டினால் என்ன?

இதில் என்ன சர்ச்சை, இதில் என்ன மன்னிப்பு?

வேண்டுமானால் ரஜினிக்கு “மக்களின் பவர்ஸ்டார்..”எனும் பட்டம் கொடுத்து பிரச்சினையினை முடித்துவிடலாம்

 

திரையுலகில் நான் சந்தித்த பாலியல் தொல்லைகள்: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

சுசித்ராவின் வீடியோ சுனாமியில் சில‌ நாட்களாக நிறுத்தபட்டிருந்த, “என் கையினை பிடித்து இழுத்தார்கள்” நிகழ்ச்சியில் இப்பொழுது இடம்பெறுபவர் லட்சுமி ராமகிருஷ்ணன்

அன்னாரையும் பலவாறு பாடாய் படுத்திவிட்டார்களாம், அதனால் அவர் நினைத்த அளவு திரையுலகில் அவரால் சாதிக்கமுடியவில்லையாம்

காய்ந்த நதியெல்லாம் வற்றாத நதி பார்த்து ஆறுதலைடையும், அந்த நதியே காய்ந்துவிட்டதென்றால்

அப்படி எல்லோருக்கும் பஞ்சாயத்து செய்யும் நடிகைக்கே சிக்கல் எனும்பொழுது அவர் யாரிடம் புகார் செய்வார்? பாவம் தான்.

  

ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட அதிமுகவில் பலர் தயக்கம் : செய்தி

ஆளும் கட்சியாக இருக்கும்பொழுதே போட்டியிட தயங்குகின்றார்கள் என்றால், இனி ஆட்சி இழந்தபின் யார் விரும்புவார்?

ஆக ஆளும் கட்சியாக இருந்த போதும், தன் அழிவினை தடுக்கமுடியாமல் அதிமுக தடுமாறுவது நன்றாக தெரிகின்றது.


ஆண் உறுப்பினராக இருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பேன்: அதிமுக எம்பி விஜிலாவிற்கு ராஜ்யசபா துணைத்தலைவர் கண்டனம்

பெண் என்றால் பெரும் சபையும் இறங்குகின்றது….


கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் என் கால்தூசுக்கு சமானம் என முழக்கமிட பிரணாய் விஜயனால் முடிகின்றது

ஆனால் 50 ஆண்டுகளாக தமிழகத்தினை ஆண்ட திராவிட கட்சிகளில் யாருக்கும் அந்த தைரியமில்லை.

ஆரியம், பார்பனியம், மத கொடுமை என பொங்கிய அந்த இயக்கத்திற்கு இன்றைய அதன் வடிவங்களான‌ ஆர்எஸ்எஸ் கும்பலை எதிர்க்க தைரியமில்லை

அதிமுகவிற்கு அறவே இல்லை, தயக்கத்தோடு திமுகவிற்கு இல்லை

“திராவிடம் 50” என சொல்லும் காலத்தில் , ஆரியத்திற்கு எதிரான அதன் அரசியல் தோல்வியினை இதனை விட விளக்க முடியாது…


தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா? : கருணாஸ் சீற்றம்

பின் வேறு எங்கே? கூவத்தூர் ரிசார்ட்டுக்குள்ளா இருக்கின்றது?.