அங்கோர்வாட் பற்றி நாம் எழுதியதில் மாற்றமில்லை
அங்கோர்வாட் பற்றி நாம் எழுதியதில் மாற்றமில்லை
சிலர் சொல்வது போல் அங்கோர்வாட் தஞ்சை கோவிலுக்கு பின்பே கட்டபட்டது என்றும் சோழனே கடற்படை வைத்திருந்தான் பல்லவன் அல்ல என்பதெல்லாம் நாம் ஏற்றுகொள்வதாக இல்லை
பல்லவா (Pallawah) எனும் பாரசீக சொல்லுக்கு பயில்வான் என்று பொருள், பாரசீகம் எனப்படும் பெர்ஷியா அதாவது இன்றைய ஈரானில் இருந்து பார்சிகள், சாதுராஷ்டிரர்கள் எனப்படும் சவுராஷ்ட்ராக்காள் இந்தியாவுக்குள் வந்ததெல்லாம் யாவரும் அறிந்தது
அப்படி முன்பே வந்த இனம் பல்லவ இனமாக இருக்கலாம் என்கின்றது ஒரு ஆய்வு
ஆய்வு அப்படியே இருக்கட்டும், ஆனால் பல்லவர்கள் ராஜராஜ சோழனுக்கும் முந்தையவர்கள் அவர்களுக்கும் சீனாவுக்கும் கப்பல் போக்குவரத்தெல்லாம் இருந்தது,
அப்படித்தான் சீனாவில் இருந்து பட்டு தொழிலை கொண்டுவந்து காஞ்சியில் வளர்த்தார்கள்
அவர்களின் கப்பல் வழியினை தொடர்ந்தே சோழர்களின் சாகசம் அடியொற்றி வந்தது
அதனால் உறுதியாக சொல்லலாம் பல்லவரே கிழக்காசியாவினை முதலில் ஆண்டனர் அவர்களை தொடர்ந்தே சோழர் வந்தனர்
சிலர் குறிப்பிடுவது போல் காலம் தெரியுமா? என்றால் இங்கு எதுவுமே முறைபடுத்தபட்ட காலம் அல்ல
தஞ்சை கோவிலை கட்டியவன் எவன் என்பதே இங்கு மறந்து போயிற்று, ஒரு ஜெர்மானியன் வந்து தமிழ்படித்து கல்வெட்டு படித்து தஞ்சை கோவிலில் உருண்டு புரண்டு கண்டறிந்ததே ராஜராஜ சோழன் எனும் பெயர்
அதை சொல்லிகொடுத்ததே ஜெர்மானியன்
இவ்வளவுதான் தமிழன் தன் வரலாற்றை கட்டி காத்த லட்சணம், இவன் எழுதி வைத்த சோழ வரலாறு எப்படி இருக்கும்
அதனால் பல்லவனே கடல்வழி ஹீரோ என சொல்லவும் முடியாது, இயேசுவுக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ராஜராஜசோழனுக்கு ஆயிரம் ஆண்டுக்கு முன்பே கடற்படையில் அசத்தினான் ஜூலியஸ் சீசர்
இதனால் சோழனே எல்லாம், தமிழனே முதலில் கப்பலை கட்டினான் என்பதெல்லாம் அரசியலுக்கு சொல்லபடும் விஷயமன்றி வரலாறு அல்ல
பல்லவர்கள் கடலோடினார்கள் காம்போஜம் எனும் கம்போடியா உட்பட கிழக்காசியாவினை ஆண்டார்கள், அப்பொழுதுதான் விஷ்ணுவுக்கு அங்கோர்வாட்டில் கோவில் கட்டபட்டு சில நூற்றாண்டுக்கு பின் புத்த கோவிலாக மாறியது, இன்று அடையாளம் சிதைந்து கிடக்கின்றது
சோழனின் எழுச்சி ஏற்பட்டபின் காஞ்சியில் பல்லவர் வீழ்ந்தார்கள் சோழபேரரசு தன் பொற்காலத்தை எட்டி பெரிய கோவிலை கட்டிற்று