அசின்.. ரஜினி… கமல்….
நடிகை அசினுக்கு பெண் குழந்தை பிறந்தது : செய்தி
மோடி சார், நீங்க “புதிய இந்தியா” பிறக்கின்றது என சொல்லிகொண்டே இருக்கின்றீர்கள்,
ஆனால் இந்த பத்திரிக்கை எல்லாம் அசினுக்கு குழந்தை பிறந்தது என சொல்லி உங்களை அவமானபடுத்துகின்றார்கள்
இவர்களை விடாதீர்கள் மோடி.
இமயமலையில் தியான மண்டபம் கட்டினார் ரஜினி
ஆக எந்நேரமும் ரஜினி அந்த மண்டபத்தில் நிரந்தரமாக குடியேற வாய்ப்பிருக்கின்றது
இன்னமும் ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் நினைத்த்து காத்திருந்தால் அவர்களை திருத்த யாராலும் முடியாது
“இலவு காத்த கிளி” என்பதை இனி “ரஜினியின் அரசியலுக்கு காத்த ரசிகர்கள்” என காலம் மாற்றிகொண்டாயிற்று.
நவம்பர் 7-ந் தேதி கட்சி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் கமல்ஹாசன்
தள்ளி நின்று விஜயகாந்த் சிரிப்பதும், அவருக்கு கொஞ்சம் தள்ளி நின்று வடிவேலு தன் பிரயத்யோக சிரிப்பான வாயில் கை வைத்து சிரிப்பதும் நமக்கு மட்டும் தெரிகின்றது.
ரஜினிக்கு மகா ரிலாக்சான நேரம்.