அசுரர்கள் பேய்களா
அசுரர்கள் பேய்களா என்றால் அது கொஞ்சம் விவாதத்துக்குட்படது
எல்லா மதங்களிமே நன்மை தீமை என மட்டுமே போதிக்கும், பைபிளில் கடவுள் நல்லவர் சாத்தான் மோசமானவன்
யூத மதத்திலும் அதன் தாக்கத்தில் உருவான எல்லா மதத்திலும் அதுதான் பிரதானம்
இந்து மதம் இதில் கொஞ்சம் வித்தியாசமானது அதன் கடவுள் நன்மைக்கும் தீமைக்கும் அப்பாற்பட்டவராய் இருப்பார்.
நல்லவரோ தீயவரோ எல்லோரும் அவருக்கு ஒன்றே, யார் என்ன வரம் வேண்டும் கேட்டாலும் அவர்கள் பக்திக்கு பதிலாக தருவார்
பின் அக்கிரமம் தலைவிரித்தாடும் பொழுது அவரே வந்து அடக்கி அழிப்பார், அதில் மாபெரும் தத்துவமும் இருக்கும்
இந்து மதத்தின் பெரும் சிறப்பு அதை யாரையும் தாக்கி பேசாது, தரைகுறைவாக மட்டம் தட்டாது
நல்லோரும் தீயோரும் ஒன்றே, ஆனால் அவரவர் சிந்தையில் குடிகொள்ளும் குணத்தாலே குழப்பம் நேருகின்றது
தெய்வ குணம் கொண்டவர்களை தேவர்கள் என்றும், அழிக்கும் குணம் கொண்டோரை அசுரர் என்றும் அது பிரிக்கின்றது ஆனால் இருவருமே அந்த பரம்பொருளுக்கு ஒன்றுதான் இருவருக்குமே பரம்பொருள் வரமருளும்
ஆனால் துர்குணங்களால் நிரம்பிவிடும் அசுர கூட்டம் பேய்களின் கூட்டமாகின்றது, பேய்களுக்கு நன்மை செய்ய தெரியாது

ஆழபடித்தால் பைபிளிலும் கடவுளுக்கும் சாத்தானுக்கு ஒரு மெல்லிய புரிந்துணர்வு இருப்பதை புரியமுடியும், சில இடங்களில் அவன் கொடிய தூதன் எனப்படுகின்றான் சில இடங்களில் அவருக்கு அடியாளாகவும் இருக்கின்றான்
பைபிள் கடவுளின் சீப் கமாண்டர் மிக்கேல் என்பருக்கும் சைத்தானுக்கும் நடக்கும் போரில் கூட கடவுள் பார்வையாளனே, ஏன் அவனை படைத்த கடவுளுக்கு அவனை அழிக்க தெரியாதா?
கடவுள் நினைத்தால் சாத்தானை ஒடுக்கி அழிக்க முடியும் ஆனால் ஏன் செய்யவில்லை என்றால் இந்த உலகம் இயங்க அவனும் தேவை என்பது அவருக்கு தெரிந்திருந்தது
இருள் இல்லாவிட்டால் ஒளியினை தேடுபவன் எவன்? பசி இல்லாவிட்டால் உணவினை தேடுபவன் எவன்?
சாத்தான் இல்லாவிட்டால் கடவுளை தேடுபவன் எவன்?
அங்கணமே அசுரர் இல்லாவிட்டால் தேவர்களும் ஏன் பரம்பொருளை தேடி ஓடபோகின்றார்கள்.
இந்த சமநிலைக்காகவே தீயசக்திகளும் கடவுளின் நோக்கில் இவ்வுலகில் உண்டு
இதில் மற்ற மதங்கள் தெய்வத்தை சூப்பர்ஹீரோவாகவும் தீயசக்திகளை மொக்கை சக்தியாகவும் வைத்திருக்கும், உதாரணம் அப்பாலே போ சாத்தானே என்றால் யெஸ் பாஸ் அல்லது உத்தரவு மகாராசா என சொன்னபடி சாத்தான் ஓடிவிடும்
ஆனால் இந்து புராணத்து வில்லன்கள் பொல்லாதவை, அவை கடவுளுக்கே சவால்விடுபவை
சுருக்கமாக சொன்னால் இந்து மதத்து வில்லன்கள் இந்த ராமசந்திரன் ரஜினி படங்களில் வருவது போல பிரமாண்டமானவை, மற்ற மத வில்லன்கள் இந்த விஜய்படத்து வில்லன் போல சொத்தையானவை
ஆம் ஒரு மானிடன் ரசிக்கவே பெரும் வில்லன் தேவைபடும்பொழுது , கடவுள் மோதும் வில்லன் எப்படி இருக்கவேண்டும்
இந்து சமய சுவாரஸ்யமே அந்த மகா பராகாசுர வில்லன்களே, அவனவனுக்கு எஸ்ட்ரா வரங்கள் வேறு
அது இரணியன், ராவணன், பத்மாசூரன், துரியோதனன், ரத்தபீஜன், நரகாசுரன், சூரபத்மன் என எவனாகவும் இருக்கட்டும், ஆனால் அழிக்கவே முடியாதபடி கடும் பலத்தோடு இருப்பான்
அவதாரங்களே அவர்களிடம் தடுமாறும், கடைசியில் மிக சிறிய பலவீனம் அவனிடம் இருக்கும் அதை பார்த்து அடிக்கும் பகவான் அதர்மத்தை ஒழிப்பார்
இம்மாதிரி சுவாரஸ்யமும் ஆச்சரியமும் கொண்ட சம்பவங்கள் எங்கும் இல்லை, அவை எல்லாம் கற்பனை என்பீர்களாயின் அக்காலத்திலே அவ்வளவு அழகாக எழுத எவனுக்கு அறிவு இருந்தது?
ஒருவேளை கதை என்றாலும் கூட அதை எழுதியவனுக்கு எவ்வளவு அறிவு இருந்திருக்க வேண்டும், அவன் வணங்கிய தெய்வம் எவ்வளவு சக்தியானதாய் இருந்த்திருத்தல் வேண்டும்
அசுரர்கள் வேறு, பேய்கள் வேறு என்பதல்ல விஷயம்
நரன், அசுரர், தேவர், பேய், பூதம் யாவும் பரம்பொருளின் முன்னால் ஒன்றே
தர்மத்தினை நிலைநாட்ட, நியாய தர்மங்களை போதிக்க அவன் இவை எல்லாவற்றையும் கொண்டு காட்சிகளை நடத்தி தன்னை நிரூபித்துகொண்டே இருக்கின்றான்
ராமாயணமும் மகாபாரதமும் சூரசம்ஹாரமும் என்றோ நடந்தவை அல்ல, அவை அனுதினமும் ஏதோ ஒரு மனிதன் வாழ்வில் நடந்துகொண்டுதான் இருக்கின்றது, அதில் அந்த தெய்வத்திடம் சரண்டைந்தவனுக்கு ஒருகாலமும் தோல்வி இல்லை என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்துகொண்டே தான் இருக்கின்றான்
அதில் இந்துமதம் எக்காலமும் வாழ்ந்து கொண்டே இருக்கும், காரணம் அது மனிதனின் மனதோடும், உலகோடும் யதார்த்த வாழ்வோடும் ஒட்டி தொடர்ந்து வரும் மதம்.