அடிக்கடி தொற்றுநோய் கிளம்பும் நாடு சீனா

அடிக்கடி தொற்றுநோய் கிளம்பும் நாடு சீனா

சீனாவின் தென் எல்லை கடலை ஒட்டியது, கிழக்கு பகுதியும் அப்படியே. இதனால் அங்கு வளமான துறைமுகங்கள் உண்டு, தென் சீனாவில் வளர்ச்சியும் சுகாதாரமும் அதிகம்

ஆனால் வடசீனா அப்படி அல்ல, பன்றிபண்ணை, வாத்து,கோழிபண்ணை இன்னும் என்னென்ன பண்ணையெல்லாமோ அதிகம், அங்கு சுகாதாரம் குறைவு

அடிக்கடி உலகில் சீனா சர்ச்சையினை எழுப்புவது போல, அங்கு அடிக்கடி தொற்றுநோய்கள் எழும்பும்

சார்ஸ் போன்ற ஆட்கொல்லி வைரஸ்கள் உலகை மிரட்டியது நினைவிருக்கலாம்

அந்த வரிசையில் இப்பொழுது கெரோனா வைரஸ் வந்து உலகை மிரட்டுகின்றது

இம்மாதிரி வைரஸ்கள் திடீரென பெருகும் பரவும், பின் தானாகவே அழிந்தும் விடும், அதன் தன்மை அப்படி

எனினும் பரவும் காலம் கொஞ்சம் கவனமாக இருத்தல் வேண்டும், இதனால் உலகெல்லாம் சீனாவில் இருந்துவரும் பயணிகளுக்கு கடும் சோதனை நடக்கின்றது

தமிழகத்துக்கும் இப்பொழுதெல்லாம் மாமல்லபுரத்துக்கு நிறைய சீனர்கள் வருகின்றார்கள், இன்னும் நிறையபேர் அவர்களின் இந்த விடுமுறைகாலத்தில் வருவார்கள்

தமிழக அரசு ஜல்லிகட்டை மட்டும் பார்க்காமல் இந்த சீனபயணிகள் மேல் ஒரு கண் வைப்பது நல்லது