அடித்து ஆடவேண்டிய நேரத்தில் ..
அடித்து ஆடவேண்டிய நேரத்தில் விதிவசத்தால் ஓரமாய் இருந்து தவிப்பவர்கள் இரண்டுபேர்.ஒன்று கலைஞர் இன்னொருவர் நடராஜன்.
இருவரும் ஆடிய அரசியல் ஆட்டம் கொஞ்சமல்ல, எத்தனையோ பேர் கதறிகொண்டு ஓடியதற்கும், காணாமல் போனதற்கும் காரணம் இவர்கள்.
தேசிய கட்சிகள் தமிழகத்தில் கால்பதிக்கவிடாமல் தடுத்ததிலும், தந்திரமாக அவர்களை காலடி செருப்பாக பயன்படுத்தியதிலும் வித்தகர்கள்.
தாங்கள் யார் என நிரூபிக்க வாய்ப்பு கண்முன் இருந்தும் அவர்களால் செயலாற்ற முடியவிலை.
இரண்டு வித்தகர்களையும் களம் திறந்துகிடக்கும் இந்நேரத்தில் காலம் அடக்கி, ஒடுக்கி மூலையில் வைத்திருக்கின்றது.
காலம் எல்லோருக்கும் எப்பொழுதும் ஒத்துழைப்பதில்லை, காற்று ஒரே பக்கம் அடிப்பதுமில்லை.