அடுத்து சீனா என்ன செய்ய போகின்றது

சீன அமெரிக்க வர்த்தக போர் முடியும், உலகின் பொருளாதாரம் தேக்கத்தில் இருந்து விடுபடும் என எதிர்பார்த்தவர்களுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்திருக்கின்றார் டிரம்ப்

கொஞ்ச நாட்களாகவே வெளிநாட்டு பொருளுக்கு அதிக வரிவிதிக்கும் முடிவில் இருந்தார் டிரம்ப், அது பேச்சுவார்த்தைக்கு சீனாவினை இழுத்துவந்தது

பல கட்ட பேச்சுவார்த்தை நடந்து சுமூக தீர்வு எட்டபடும் என உலகம் நம்பியது

இரு பெரும் பொருளாதார வல்லரசுகள் நடத்திய பேச்சுவார்த்தை என்பதால் பெரும் கவனம் இருந்தது

ஆனால் டிரம்பானவர் வம்பானவர் அல்லவா? சீன பொருட்களுக்கான வரியினை 10 முதல் 25 சதவீதம் உயர்த்திவிட்டார்

இதனால் சீனா கடும் கோபத்தில் இருக்கின்றது, டிரம்ப் பெரிதும் அலட்டிகொள்ளவில்லை

முன்பே இப்படி வரிவிதித்துத்தான் சீனா பேச்சுவார்த்தைக்கு வந்தது , இவ்வளவு நாள் இழுத்து பேசி மறுபடியும் அதே முடிவு என்றால் எப்படி என பல்லை கடிக்கின்றது சீனா

ஒரு காலத்தில் சோவியத் பக்கம் இருந்த சீனா உருப்படவில்லை, தள்ளாடியது

அங்கிள் சைமன் போல விவசாயம் பன்றிவளர்ப்பு வாத்து வளர்ப்பு என பேசிகொண்டிருந்த மாவோவின் திட்டம் பெரும் தோல்வி

சோவியத் பக்கம் இருந்து சீனாவினை பிரித்து சில சலுகைகளை கொடுத்தது நிக்சனின் அமெரிக்கா

அதில் இருந்து சீனா நாலுகால் சீற்றத்தில் முன்னேறியது, டெங் ஜியோ பிங் அதை புயல் வேக முன்னேற்றமாக மாற்றினார்

இப்பொழுது சீனாவினை தட்டிவைக்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இருப்பதால் சில மோதல்கள் நடகின்றன‌

எனினும் பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த கதைதான், சீனாவிடமும் அந்நிய செலாவணி உட்பட சில பல‌ங்கள் இருக்கின்றன அதை அமெரிக்காவுக்கு எதிராக திருப்பினால் நிச்சயம் அமெரிக்காவும் சிறிது பாதிக்கபடும்

ஆட்டத்தின் அடுத்த கட்டத்தை டிரம்ப் தொடங்கியிருக்கின்றார், அடுத்து சீனா என்ன செய்ய போகின்றது என உலகமே பார்த்துகொண்டிருக்கின்றது

மோடி மட்டும் மே 23ம் தேதியினை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றார்