அடேய் சங்கி உன் போக்கு எல்லை மீறிவிட்டது

அடேய் சங்கி உன் போக்கு எல்லை மீறிவிட்டது, உன் பங்குதந்தையிடம் சொல்லி உன்னை என்ன செய்கின்றோம் பார் என சில மிரட்டல்கள் வருகின்றன‌

அய்யன்மீர், அவருக்கே ஆயிரம் சிக்கல்கள், ஏகபட்ட பிரச்சினைகள். போதாகுறைக்கு தூத்துகுடி மறைமாவட்டத்தில் சாதி சண்டை வேறு உச்சத்தில் இருக்கின்றது

அதனால் எம்மை பற்றி நீவீர் பிராது கொடுக்க சென்றால் அவர் தன் கஷ்ட நஷ்ட துயரங்களை உங்களிடம் சொல்லி அழும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது.

ஒருவேளை நீவீர் எம்மை சபையினை விட்டு தள்ளினாலும் எனக்கு மின்சாரம், ரேஷன், குடியுரிமை,நிலவுரிமை, ஆதார் கார்டு எல்லாம் ரத்து ஆகாது, அதை கொடுப்பது பங்கு சாமியார் அல்ல