அட பார்ப்பவன் வாய்விட்டு சிரிக்கமாட்டானா?

பெரும் புகழ் படைத்தோர் பெரும் வாய்ப்பு பெற்றோர் பலருக்கு குழந்தை இருக்காது. அவர்கள் ஒரு பிள்ளைக்காக ஏங்கி தவிப்பர்

ஆனால் சில காரணங்களுக்காக ஆண்டவன் அதை அருளமாட்டான்

ஆம் பிள்ளைகள் என்பது சொத்துக்கும் வீட்டுக்கும் கட்சிக்கும் மட்டும் வாரிசு அல்ல, பிள்ளைகள் மூலமே தகப்பன் அறியபடுவான், தனக்கு பின் தன் பெருமையினை காப்பவனே தனக்கான வாரிசு என அன்று ஒவ்வொரு அரசனும் தன் மகனை திட்டமிட்டு உருவாக்கி அமரவைப்பான் இல்லாவிடில் வாரிசு என இன்னொருவனையே அமர்த்துவான்

மிக சிறந்த உதாரணம் அலெக்ஸாண்டர், அந்த மாமன்னன் தன் சாவை அறிந்து தன் மகனை விடுத்து தன் நண்பர்களுக்கே ராஜ்யத்தை 4 பங்காக பிரித்துகொடுத்தான்

தன் வாரிசு அமர்ந்து தன் மாபெரும் சாம்ராயத்தை வலுவிழக்க செய்துவிட கூடாது எனும் திட்டம் அது

இந்த மு.க ஸ்டாலின் என்பவரை கண்டால் கலைஞர் என்பவர் மிக மிக பரிதாபமான பிறவி என்றே தமிழகம் சொல்ல ஆரம்பித்துவிட்டது, அம்மனிதர் பல இடங்களில் ஒருமாதிரி நோக்கபடுகின்றார்

மணவிழாவில் மணமகனுக்கு பதில் அவர் தந்தை பெயரை சொன்ன தலைவர் எங்காவது உண்டா? இது சீர்திருத்த திருமணமாம், பெரியார் வழியாம், பெரியார் இருக்கும் வரை திமுக அசையாதாம்

அட பசும்பொன் தேவரின் சமாதியில் , பெரியாரை மதுரை பக்கமே வரவிடாமல் ஓடவிட்டு அடித்த தேவரின் சமாதியில் குங்குமம் வைத்துவிட்டு இந்த சவுடால் தேவையா?

அட பார்ப்பவன் வாய்விட்டு சிரிக்கமாட்டானா?

அதுவும் சீர்திருத்த திருமணம் என்றால் மணமகனுக்கு பதில் மாமனார் பெயரை சொல்வதா சீர்திருத்தம்?

இந்த காட்சிகளை பார்க்கும் பொழுது ராமசாமியும், அண்ணாதுரையும், ராம்சந்திரனும், ஜெயலலிதாவும் கொடுத்து வைத்தவர்கள்

வாரிசே இல்லாமல் வாழ்ந்த அவர்களின் புகழ் இனி அப்படியே இருக்கும், எக்காலமும் இருக்கும்

கருணாநிதி அவ்வகையில் துர்ப்பாக்கியசாலி அதுவும் தன் வாரிசை கட்சிக்கு இழுத்துவந்த வகையில் தன் முகத்தில் எறிய ஒவ்வொரு தமிழன் கையிலும் சாணியும் கொடுத்துவிட்டே சென்றிருக்கின்றார் பரிதாபம்