அணியின் பெயர் “சின்னதம்பி லெவன்ஸ்” அல்லது “சிக்ஸர் 16”
இந்த ஐபில் ஆட்டத்தில் பஞ்சாப் அணிசார்பாக வெளுத்து வாங்க தொடங்கிவிட்டார் கெயில்
கடந்த ஐபிஎல்லில் பெங்களூர் அணியில் அவர் சொதப்பியது ஏராளம்
ஆக அவருக்கும் கோலிக்கும் ஏதோ உள்குத்து இருப்பது தெளிவாக தெரிகின்றது, மனிதர் பழிவாங்க தொடங்கிவிட்டார்
கெய்லின் அதிரடி தொடங்கிவிட்டதில் பிரீத்தி ஜிந்தாவிற்கு கடும் மகிழ்ச்சி
இந்த ஷில்பா ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா எல்லாம் ஐபில் அணி உரிமையாளராக வலம் வருகின்றார்கள், ஆனால் தலைவிக்கோர் அணி இல்லை.
தங்க தலைவி ஒரு ஐபில் அணி வாங்க சங்கம் ஆசிர்வதிக்கின்றது
அவர் வாங்காவிட்டால் உலகின் முண்ணணி கிரிக்கெட் வீரர்களை அடிமை முறையில் வாங்கி ஐபிஎல் அணி உருவாக்கி அதை தலைவி அணியாக அறிவித்து, சில அம்பையர்களையும் வாங்கி கொடுத்து அடுத்தவருடம் களமிறக்க வேண்டும்
அணியின் பெயர் “சின்னதம்பி லெவன்ஸ்” அல்லது “சிக்ஸர் 16”