அணிலுக்கு ராமன் 3 கோடு போட்டான் என எதில் சொல்லபட்டுள்ளது என்பதுதான் தெரியவில்லை

அணிலுக்கு ராமன் 3 கோடு போட்டான் என எதில் சொல்லபட்டுள்ளது என்பதுதான் தெரியவில்லை

அந்த சம்பவம் வால்மீகி ராமாயணம், துளசிதாசர் ராமாயணம், கம்ப ராமாயணம் என எதிலுமே இல்லை

எவனோ எங்கோ இந்த ஜெயமோகன் அவர் போக்கில் மகாபாரதம் எழுதுவது போல சொல்லி வைத்த கதையினை பிடித்து கொண்டு ராமன் அணிலை தடவினான், சீதையின் முதுகில் ஏன் கோடு இல்லை என்பதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியதனம்

இதை தொடங்கி வைத்தது யாரென்றால் திராவிட கும்பல்கள்

அவர்களுக்கு சுய அறிவே கிடையாது அதை பகுத்தறிவு என சொல்லி கொள்வார்கள். ஒரு விஷயத்தின் மூலத்தை சுட்டிகாட்டி அதை மறுப்பது பகுத்தறிவு

இந்த கோஷ்டி காற்றில் கத்தி வீசும் கோஷ்டி, இல்லாத ஒன்றை மறுத்து தனக்கு அறிவு இருப்பதாக காட்டிகொள்ளும் மடத்தனமான கோஷ்டி

இவர்களாக ஒரு கட்டுகதையினை உருவாக்கி அதை மறுத்தும் கொள்வது அவர்கள் அறிவு

அவர்கள் அப்படித்தான், அவ்வளவு அறிவு இருந்தால் ஏன் பெரியாரை தலைவன் என சொல்லிகொள்ள போகின்றார்கள்?