அண்ணாச்சி
அந்த ராஜகோபால் அதிகம் படிக்காதவர் ஆனால் கடும் உழைப்பாளி, பின் தங்கிய நாடார் சாதி
12 வயதில் இருந்தே அவர் உழைத்த உழைப்பு அவரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தியது, ஒரு நாடார் சைவ உணவகத்தை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தியதெல்லாம் பெரும் விஷயங்கள்
முதன் முதல் உணவகத்தில் சீருடை இன்னபிற அடையாளம் என மிக நாகரீகமான சுத்தமான உணவகமாக அவரின் சரவண பவன் விளங்கியது
தொழிலில் வேகமாக வளர்ந்தார் அவர், எங்கெல்லாம் தமிழர் உண்டோ அங்கெல்லாம் உலகில் ஏராளமான கடைகள் திறக்கபட்டன
அண்ணாச்சி உழைப்பினை எவ்வளவு நம்பினாரோ அப்படியே கடவுளை நம்பினார்
வனதிருப்பதி உட்பட பல ஆலயங்களுக்கு கோடி கோடியாய் அள்ளிகொடுத்தவர் அவர்
அவர் கடவுளை நம்பியது தவறல்ல அப்படியே கடவுளுக்கு மேல் ஜோசியங்களை நம்பியதுதான் தவறு
ஒரு சில நம்பிக்கைகள் அதை செய்ய சொல்கின்றன
இந்திரா அப்படி செய்துதான் அதாவது சில யாகங்களை செய்துதான் பெரும் ஆபத்தில் சிக்கினார் என்பார்கள், இரு மகன்களும் கொடூரமாக செத்தது அப்படியே என்பார் சிலர்
ஜெயலலிதா தன்னை ஜோசியர்கள் பிரதமராக்குவார்கள் என நம்பியே அக்கனவு நிறைவேறாமலே செத்தார்
கலைஞருக்கும் ஜாதகத்தில் நம்பிக்கை உண்டென்பார்கள், அவர் முக ஸ்டாலினின் ஜாதகத்தை கணித்தோ என்னமோ கடைசி வரை அவரை தலைவராகவிடவில்லை என்பதெல்லாம் யூகங்கள்
இந்த அண்ணாச்சிக்கு ஜீவஜோதி ஜாதக அமைப்பும் உங்கள் ஜாதக அமைப்பும் பிரமாதமாக இருகின்றது என சொல்லி ஜோசியர்கள் தவறான வழிகாட்டினார் என்றன அக்கால செய்திகள்
அண்ணாச்சி சங்கரமடம் முதல் பல இடங்களில் காணபட்டவர் என்பதால் அதில் உண்மையும் இருக்கலாம்
சில ஜாதகங்கள் அப்படிபட்டவை, உதாரணம் அந்த ஜோசப்பின் விதவைதான் முதல் கணவன் அல்பாயுசுதான்
ஆனால் அவளை அடைந்தபின் நெப்போலியன் பெரும் உயரம் தொட்டான் , உலகையே அலற வைத்தான்
அவளை பிரிந்தபின் அவன் சரிந்தான் அவன் வாழ்வு முடிந்தது
இப்படி வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு
அப்படித்தான் அண்ணாச்சியினையும் நம்ப வைத்திருக்க்கின்றது ஒரு கூட்டம், அப்பெண்ணை அடைய பல செய்ய கூடாத வழிகள் செய்த அண்ணாச்சி சிக்கலில் இருக்கின்றார்
என்னதான் ஜோசியர் சொன்னாலும் அண்ணாச்சிக்கு அறிவு என்னாயிற்று?
தொழிலில் உச்சத்தில் இருந்தார் அண்ணாச்சி, அதற்கு மேல் அத்தொழிலில் உயர என்ன இருக்கின்றது என இந்த பாதைக்கு வந்தார் என்பதுதான் தெரியவில்லை
கழுகு போல அவரின் ஆசை இறக்கை கட்டி பறந்திருக்கின்றது
ஆனானபட்ட சாலமோன் அரசரின் சாம்ராஜ்யமும் ஜூலியஸ் சீசரின் சாம்ராஜ்யமும் பெண்களால் சரிந்தபொழுது அண்ணாச்சி என்ன செய்வார்?
உழைப்பால் உயர்ந்த ஒரு மனிதர் பெண்ணால் சரிந்திருகின்றார்.
ஜீவஜோதி எனும் பெண்ணின் கண்களில் அவரின் விதி இருந்திருக்கின்றது
அண்ணாச்சியின் உழைப்பும் உயர்வும் பெரும் சாதனை, அதன் பின் அவர் அடைந்ததெல்லாம் வேதனை