அண்ணாச்சி நெசமாவா?

“அண்ணாச்சி தளபதி மட்டும் கோலாலம்பூர்க்கு வந்திருந்தாரு, அப்படி கொண்டாடியிருப்போம் ஆனா அவரு சிங்கப்பூருக்கு வந்துட்டு போயிட்டாரு

டேய் அவர் படமெல்லாம் பார்த்தியா?

ஆமா அண்ணாச்சி பறவைகள் கூட எல்லாம் படம் எடுத்தாரு, அவர் பாசக்கார மனுஷன் அண்ணாச்சி, இளகின மனசு, ரசனைக்காரரு, அவர் மனசு இருக்கே…

டேய் அது எங்க எடுத்த படம்?

சிங்கப்பூர்ல‌

உன் வாயில மண் அள்ளி போட‌

அண்ணாச்சி நான் செத்தாலும் திமுக கொடிதான் போடனும் வீட்ல சொல்லியாச்சி

எப்போ

தாலிகட்டும் போதே

அதாவது தாலியா இல்ல உதய சூரியன் அடையாளமா?

வீட்டுல ஆத்தா ஒத்துக்காது இல்லண்ணா கண்டிப்பா பொண்ட்டாட்டி கழுத்துல உதயசூரியன் தான் தொங்கும்

தொங்கும்டா தொங்கும், சரி அந்த பறவை படம் எங்க எடுத்தாரு தெரியுமா?

அதான் சொன்னேன்ல சிங்கப்பூருல‌

இல்லடா, நல்லாபாரு இது கோலாலம்பூர் உங்க கடையில இருந்து 3 கிலோ மீட்டர்தான்

அண்ணாச்சி நெசமாவா? (சொல்லும் பொழுதே சரிந்துவிட்டான்)

இதுக்குதாண்டா அடிக்கடி வெளியில போகணும், எப்பவும் தளபதி கலைஞர்னு பேச்சை கேட்டுகிட்டே இருந்தா அப்படித்தான்

மனுஷனாய்யா நீரு, ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா?

லேய் அவர் என்ன என்கிட்ட சொல்லிட்டா வந்தாரு, உன்கிட்டதான் சொல்லிருக்கணும்..”

சுத்தியல் விழுந்த வடிவேலு மாதிரி நின்றவன் மெதுவாக பேசினான் உணர்ச்சியே இல்லாமல்

“அண்ணாச்சி அந்த கிளி எல்லாம் கொடுத்து வச்சது அண்ணாச்சி, சரி வாரும் நாம போய் அந்த கிளிகளையாவது தொட்டு பார்த்துட்டு வருவோம்

பார்த்துட்டு?

சும்மா வரமுடியுமா? க‌லைஞர் போல “தோட்டம் வந்த கிளியே,
தளபதி தோளில் தொற்றிய கிளியே, பூங்கிளியே, பால் கிளியே,
அஞ்சுகம்மாள் பேரன் மேல் அமர்ந்த பஞ்சவர்ணகிளியே” என கவிதை பாடிட்டு வருவோம்,

அந்த இடத்துல தளபதிக்கி ஒரு சிலை வைக்கணும் அண்ணாச்சி..”

இப்படியாக கனவில் இருந்தவனை உலுக்கி நிகழ்காலத்திற்கு இழுத்தால், ஒரு மாதிரி பார்த்தான்

“அண்ணாச்சி, தளபதி அண்ணாச்சி, இங்க வந்துருக்காரா..போச்சே போச்சே தளபதி போச்சே”

ஆமா ஆட்சி அமைக்கமுடியாம போச்சி

அட இல்ல அண்ணாச்சி, அவர பார்க்க முடியாம போச்சே, போச்சே போச்சே நான் என்ன செய்வேன்…” என அவன் செய்த அழிச்சாட்டியத்தில் திருவிளையாடல் நாகேஷ் தோற்றுகொண்டிருந்தார்