அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தர் கன்னடராக இருப்பது தவறாம்

ஏதோ தமிழகம் முழுக்க கலெக்டர்கள் எல்லாம் தமிழர் போலவும், இன்னும் உயர்பதவியில் இருப்பவர் 100% தமிழர் போலவும் இப்பொழுது அண்ணா பல்கலைகழகத்தில் மட்டும் கன்னடர் வந்து அமர்ந்ததை போலவும் பலர் கிளம்பியாயிற்று

தமிழன் இந்தியா எங்கும் பல இடங்களில் கலெக்டராக இருக்கின்றான், பெங்களூர் மேயர் கூட தமிழர்தான்

இன்னும் இந்தியாவின் பிரதான பல்கலைகழகங்களில் எல்லாம் தமிழனுக்கு பெரும் பதவிகள் இருக்கின்றன‌

மாநிலம் என்ன? உலகம் முழுக்க பல நாடுகளில் அவனால் பெரும் பதவிகளை அடைய முடிகின்றது. சுந்தர் பிச்சை பிரசித்திபெற்ற கூகுள் நிறுவணத்தின் உயர் பதவியினை அடையும்பொழுது எந்த இனமான அமெரிக்கனும் கொடி பிடிக்கவில்லை

இதில் அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கன்னடனாக இருப்பது குற்றமாம்

ஆனால் தமிழன் பெங்களூரில் பல துறைகளிலும் அரசு பணிகளிலும் ஆதிக்கம் செலுத்தலாமாம்

கன்னட அரசின் வாக்கு அரசியலை எதிர்ப்போம், காவேரியில் அவர்கள் ஆடும் நாடகத்தை எதிர்ப்போம்

ஆனால் மொத்த கன்னட மக்களையும் எதிரிகளாக பார்ப்பது என்பது பெரும் தவறு

அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தர் கன்னடராக இருப்பது தவறாம், ஆனால் வேந்தரான ஆளுநர் புரோகித் மட்டும் மராட்டியராக இருக்கலமாம்

ஏன் வேந்தரையும் தமிழனாக இருக்க சொன்னால் என்ன? சொல்லமாட்டார்கள்.

இவர்கள் அழிச்சாட்டியம் எல்லை மீறி செல்கின்றது, ஒரு இந்தியன் இந்தியாவின் எந்த மூலைக்கும் சென்று பணியாற்ற அவனுக்கு உரிமை உண்டு