அண்ணே.. கேரள வெள்ள நிவாரணம் மத்திய அரசு வெறும் 500கோடி கொடுத்திருக்கு
அண்ணே நீங்க சங்கி ஆயிட்டீங்க, கேரள வெள்ளத்துல மத்திய அரசு வெறும் 500கோடி கொடுத்திருக்கு, அதெல்லாம் அவங்க புட்டு சாப்பிட கூட காணாதுண்ணே
அப்படியா
ஆமாண்ணே வெறும் 500 கோடி கொடுத்துட்டு ஓடிபோறது திராவிட விரோதம், தென்மாநில வெறுப்பு, வடக்கு வளர தெற்கு தேய செய்யும் இந்துத்வா வெறி
ஏன் அப்படி
இங்க பாஜக இல்லங்கிறதுக்காக மோடி அரசு திட்டமிட்டு பழிவாங்குது
சரி வெள்ளத்துல கேரளாவுல எதெல்லாம் அழிஞ்சிருக்கு
நிறையாண்ணே, ஏகபட்டது
விமான நிலையம்?
அது மூழ்கிருச்சின்னே, இன்னும் நிறைய செலவு இருக்கு
இந்த தேசிய நெடுஞ்சாலை
ஆமாண்ணே எல்லாம் அரிச்சிட்டு போயாச்சி
இந்த ரயில்வே தண்டவாளம் இன்னபிற
அட ஆமாண்ணே எல்லாம் போயிட்டு
இதெல்லாம் யார் செலவு பண்ணுவா?
சென்ட்ரல் கவர்மென்டுண்ணே அவங்கதான் செய்யணும்
எவ்வளவு கோடி ஆகும்?
அது ஆகும்ணே பல நூறு கோடி
பின்ன ஏண்டா வெறும் 500 கோடின்னு கத்துறீங்க? அதையும் சேர்த்து சொல்லுங்கடா
அண்ணே அது எவ்வளவுண்ணு தெரியலண்ணே
அடேய் கேரளாவில துறைமுகம், விமான நிலையம், சாலை இன்னும் ஏகபட்ட விஷயம் மத்திய அரசு கையிலதான் இருக்கு, அவங்க கோடிகணக்குல செலவழிச்சாதான் இனி கேரளா இயங்கவே முடியும்
அப்படியாண்ணே
சும்மா 500 கோடி கொடுத்துட்டு ஓடிட்டாங்கண்ணு சொல்லாத, அவங்களுக்கும் அங்க ஏகபட்ட செலவு இருக்குண்ணு சொல்லு
அதெல்லாம் மாட்டோம்னே
ஏன்?
இங்க மத்திய அரசு எதை எல்லாம் செய்யும்ணு எங்களுக்கு சொல்லவே மாட்டாங்க, பூரா மாநில அரசு சாதனைன்னு போஸ்டர் ஓட்டுவாங்க
போடா போ, முதல்ல மத்திய அரசு எதை எல்லாம் நிர்வகிக்கும்ணு பாரு அப்போதெரியும் எத்தனை ஆயிரம் கோடி கேரளாவில் அவங்களுக்கு செலவுண்ணு
இருங்கண்ணே படிச்சிட்டு வாரேன்
வராத, அப்படியே ஓடு”