அதன் பாதிப்பு உலகெல்லாம் தெரிகின்றது
ஆட்டோ மொபைல் தொழிலில் இப்பொழுது சவால்கள் அதிகம், அமெரிக்க சீன உலோக வரி சிக்கல் சாமான்யம் அல்ல
உலகில் தொழில்நுட்பத்துக்கு பெரும் காப்புரிமை கொண்ட நாடு என்பதால் அமெரிக்காவின் ஆதிக்கம் ஆட்டோ மொபைல் தொழிலிலும் உண்டு
பெரும் நிறுவணங்கள் அதில் திகைக்கின்றன, அதன் பாதிப்பு இந்தியாவிலும் உண்டு
பெட்ரோல் பயன்பாட்டுக்கு ஒரு முடிவு கட்டி மின்சார கார்களை அதிகளவில் தயாரிக்க உலகநாடுகள் முடிவு செய்திருப்பதும் அதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கும் என்பதாலும் ஆட்டோ மொபைல் தொழிலில் ஒரு தாக்கம் வந்திருக்கின்றது
சரி ஆட்டோ மொபைல் தவிர எதில் வீழ்ச்சி என்றால் ஒருவனுக்கும் சொல்ல தெரியவில்லை
தன் அரோம்கோவின் மிகபெரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையினை இந்தியாவின் குஜராத்தில் திறக்கின்றது சவுதி அரேபியா
பெரும் பொருளாதார எதிர்பார்ப்பு இல்லாமல் இதெல்லாம் சாத்தியமில்லை,பலர் பயமுறுத்துவது போல் பெரும் பாதிப்பு எல்லாம் வராது
ஆனானபட்ட சீனாவின் உற்பத்தியே 40 ஆண்டுகளில் முதன் முறையாக 30% சரிந்து சோக கீதத்தை காட்டுகின்றது
அதன் பாதிப்பு உலகெல்லாம் தெரிகின்றது, இந்தியாவில் அது லேசாக தெரியலாம்
அவ்வளவுதான் விஷயம்
ஏதோ பூரா பயலும் ராக்பெல்லர் குடும்பத்தின் வாரிசு போல பெரும் பரம்பரை பணக்காரனாக இருந்தது போலவும் இனி எல்லோரும் தெருவுக்கு வருவது போலவும் பயமுறுத்திகொண்டிருக்கின்றான்