அதாவது யுத்தத்துக்கு தயாரில்லை
சவுதியின் எண்ணெய் நிலையங்களை ஈரான் தாக்கியது உலகறிந்தது, இதனால் அமெரிக்கா ஈரானை அடிக்கும் என வந்த ஹேஸ்யங்களை அமெரிக்கா மறுத்தது கூடுதல் பொருளாதார தடை விதிக்கபடும் என மட்டும் அது அறிவித்தது
இனி என்ன யழ்வு தடை இருக்கின்றது என ஈரான் திருப்பி கேட்டதில் உப்பு போடாமல் சப்பாத்தி சாப்பிடும் படியாக உப்புக்கு தடை என்ற அளவில் சம்பந்தமில்லாமல் பேசிகொண்டிருக்கின்றது அமெரிக்கா
அதாவது யுத்தத்துக்கு தயாரில்லை
ஆனால் சவுதியால் சும்மா இருக்க முடியுமா? அமெரிகாவின் நவீன விமானங்களை எதற்கு வைத்திருகின்றது
இதனால் சிரியா மற்றும் ஈராக்கில் ஈரானின் ஆதரவு முகாம்களை நொறுக்க கிளம்பிற்று சவுதி, ஆனால் எதை தாக்குவது என தெரியவில்லை
ஆத்திரத்தில் அடிக்க கிளம்பிய சவுதிக்கு எதை அடிப்பது என தெரியாமல் கண்ணை கசக்கிய நிலையில் அங்கு வந்தது இஸ்ரேல்
இவ்வளவுதானா விஷயம் எதிரிக்கு எதிரி என் நண்பன், வா இலக்கினை நான் காட்டுகின்றேன், இது போக சகல உதவிகளையும் செய்கின்றேன், அட நானே அடிக்கின்றேன் நீ சும்மா வந்துட்டு போ, அடித்தது நீ என மட்டும் சொல்லிகொள் என களத்தில் இறங்கிவிட்டது
ஆம் ஈரானின் இலக்குகளை சவுதி தாக்கியதாக செய்தி வந்திருக்கின்றது, இஸ்ரேலிய விமானங்கள் சும்மா பார்க்க வந்ததாம்
உண்மையில் இருநாடுகளும் ஈரானுக்கு எதிராக இறங்கிவிட்டன, தந்திரமாக சவுதியினை தன் பக்கம் சேர்த்துகொண்டது இஸ்ரேல்
உலகமே உற்றுநோக்க்கும் பெரும் இஸ்லாமிய பாதுகாவலாரன சவுதி , இஸ்லாமியரின் பரம வைரியான இஸ்ரேலுடன் இணைந்து இஸ்லாமிய நாடான ஈரானை எதிர்ப்பது சில அதிர்வுகளை ஏற்படுத்திவிட்டது
முன்பு ஈரானுக்கு எதிராக இப்படித்தான் சதாமை ஏவினார்கள், பின் சதாம் என்னபாடுபட்டார் என்பது உலகுக்கே தெரியும், அப்படி சதாமின் முடிவு சவுதிக்கும் நடக்கும் என எச்சரிக்கின்றது ஈரான்
அதிரடி திருப்பங்கள் ஏற்படுகின்றன, இனி இஸ்ரேலிய இலக்குகள் தாக்கபடலாம்
இஸ்ரேல் இலக்கு என்றால் இஸ்ரேலில்தான் புகுந்து அடிக்க வேண்டியதில்லை, பன்னாட்டு முதலீடு என அவை அமீரகம் , குவைத், பஹ்ரைன் என ஈரானின் காலடியிலே உண்டு
யாருக்கும் எதுவும் நடக்காமல் சிக்கல் தீர்ந்தால் நலம் , ஆனால் எப்பொழுதும் எதுவும் நடக்கலாம்
இந்நிலையில் சவுதி எண்ணெய் நிலையங்களுக்கு கூடுதல் படைகளையும் நவீன பாதுகாப்பு சாதனங்களையும் அனுப்பியிருக்கின்றது அமெரிக்கா, அவர்களும் ஒரு முடிவோடுதான் இருக்கின்றார்கள்