அதிகாலை நீராடு என்பது தமிழர் வாழ்வியல் தத்துவம்

அதிகாலை நீராடு என்பது தமிழர் வாழ்வியல் தத்துவம், இந்துமதம் வலியுறுத்தும் தத்துவம் கூட‌

இந்தியாவின் சீதோஷ நிலைக்கு அது மிக மிக அவசியம் என கண்டனர் முன்னோர், வலியுறுத்தினர்

இந்த ராம்சாமி குளிக்கவே மாட்டாராம் , அப்படி இருந்திருகின்றது அவரின் நாகரீகம். திருமணத்துக்காக குளித்தாராம்

அதைவிட முக்கியம் அடுத்தவரி, ஆம் அன்றே தேனிலவுக்கு ஏற்காடு சென்றாராம். ஆக தேனிலவுக்காக குளித்திருக்கின்றார்

இதெல்லாம் திராவிட புரட்சி, இன விடுதலை, சமூக நீதி போராட்டம்.

தொடர்ந்து படியுங்கள், திருமணத்தை அடுத்து அண்ணா கோஷ்டிக்கும் பெரியாருக்கும் முட்டிகொள்கின்றது, பெரியார் தனக்கு உயிர் ஆபத்து இருப்பதாகவும் குள்ள உருவம் கத்தியோடு சுத்துவதாகவும் வழக்கு தொடர்கின்றார்

கவனியுங்கள், காலமெல்லாம் அவர் யாரை எதிர்த்தாரோ அந்த பிராமணர் மேல் வழக்கு தொடுக்கவில்லை , குள்ள உருவம் என சொல்லி தொடர்ந்திருக்கின்றார்

குள்ளமனிதர் அண்ணாதுரை ராம்சாமி தன்னை பற்றி சொல்வதாகவும், அந்த கத்தி குள்ளன் என என தன்னையே சொல்வதாகவும் அழுதிருக்கின்றார்

இனமான புரட்சி எப்படி இருந்திருக்கின்றது பார்த்தீர்களா? பேரரிஞரே கத்தியோடு சுத்தினார் என்றிருக்கின்றார் அவர்

இவர்கள் போராடிய லட்சணம் இப்படித்தான் இருந்திருக்கின்றது

இந்த இடத்தில் நமக்கொரு சந்தேகம்

ராம்சாமி சொன்னதெல்லாம் உண்மை என்கின்றது அக்கோஷ்டி, அவ்வகையில் நீண்ட கத்தியோடு குள்ள‌ உருவம் சுற்றியது உண்மையாகின்றது

ஆனால் கத்தியோடு சுத்திய குள்ள உருவம் தான் அல்ல என்கின்றார் அண்ணா

பின் பெரியாரும் ஆம் நான் அண்ணாவினை சொல்லவில்லை என்கின்றார்

அப்படியானால் கத்தியோடு சுத்திய குள்ள உருவம் யாராக இருக்கமுடியும்?

ஒருவேளை கருணாநிதியாக இருக்குமோ?

குள்ள உருவம் குத்தி ராம்சாமி செத்து அண்ணா உள்ளே போனால் திராவிட கழகம் ……
…….
…….

அய்யகோ தலையே சுற்றுகின்றது