அதிமுகவின் நடவடிக்கைகள் சுவாரஸ்யமாகிவிட்டன‌

அதிமுகவின் நடவடிக்கைகள் சுவாரஸ்யமாகிவிட்டன‌

முத்தலாக் சட்டத்தை வழக்கம் போல மோடியின் செருப்பை தொட்டு ஏற்றுகொண்டார் பன்னீர் செல்வம் பெற்றெடுத்த சீமந்த புத்திரர்

ஆக மக்கள் அவையில் அதிமுக அதற்கு ஆதரவு தெரிவித்துவிட்டது

ஆனால் மாநிலங்கள் அவையில் சில திருத்தங்களை கண்டித்து அதிமுக கோஷ்டி வெளிநடப்பு செய்துவிட்டது

என்னாயிற்று இவர்களுக்கு கோமா நிலையில் இருந்து விழித்துவிட்டார்களா என யோசித்த பாஜக தரப்பு உண்மையினை கண்டறிந்துவிட்டது

அதாவது அதிமுகவில் பன்னீர் கோஷ்டியும் அதற்கு எதிர் கோஷ்டியும் உருவாகியிருப்பது பட்டவர்த்தனமாக தெரிந்தாகிவிட்டது

ஆக இனி பன்னீர் மகன் என்ன சொன்னாலும் எதிர் கோஷ்டி விடாது

மக்களவையில் அதிமுக எண்ணிக்கை குறைவு பன்னீர் மகன் மட்டுமே, ஆனால் மாநிலங்களவையில் எண்ணிக்கை அதிகம்

இதனால் இனி பன்னீர் மாநிலங்கள் அவை அதிமுகவினரை பாஜக அரவணைக்கும், அதன் பின் பன்னீர் மகன் என்ன எதிர்த்து பேசிவிடத்தான் போகின்றாரா?

அப்படியே பேசினாலும் மன்னிப்பு கேட்க பன்னீர் உடனே விமானம் ஏறிவிடமாட்டாரா என்ன?