அதிமுக எனும் நாடக சபா பிரமாதமாக இயங்கி கொண்டிருக்கின்றது

“அந்த மாபெரும் சேனை திராவிட நாடு வேண்டி போர்தொடுக்க சென்றது

திராவிடன் வாழ கடும்போர், திராவிட விடுதலை வேண்டி நீண்டபோர் என கடும்தரிப்பில் அணிவகுத்தது

அதன் போர்முழக்கமும், ஆயுத ஒலியும் அந்த இயக்கம் திராவிட நாட்டை அடையும் என சொல்லிகொண்டே இருந்தது

ஆனால் வழியில் ஒரு தங்க சுரங்கதை கண்டபின் அவர்கள் முழக்கம் மாறி பாட ஆரம்பித்தார்கள்

போர் முழக்கம் என்பது பாடலாயிற்று, ஆயுதம் தாங்கிய கரங்கள் தாளம் வாசித்தன‌

பகைவரை மிதிக்க வந்த கால்களுக்கு சலங்கை பூட்டபட்டது

எங்கும் ஆனந்தம், எல்லாம் கொண்டாட்டம்

கவசத்தை களைந்து உடலுக்கு சந்தணம் பூசினார்கள், கத்தியினை கீழே வைத்துவிட்டு மதுகிண்ணம் ஏந்தினார்கள்

போர் பாசறை போகமண்டபமாயிற்று

கவனித்துகொண்டிருந்த அந்த வீரன் அந்த தளபதியிடம் கேட்டான்

தளபதியாரே இப்படி எல்லாம் ஆடிபாடினால் எங்கிருந்து எதிரிகளை அடித்துவிரட்டி நாட்டை அடைவீர்? நம் லட்சியம் என்னாவது?

தளபதி சொன்னான் இதோ இந்த தங்க சுரங்கத்தை பணமாக்கி அந்த நாட்டை விலை கொடுத்தே வாங்கிவிடலாம் எதற்கு வீணாக போர்?….”

என்றோ ஒரு நாள் கண்ணதாசன் எழுதியது இன்றும் திமுகவுக்கு அப்படியே பொருந்துகின்றது

கண்ணனை நினைத்தவர்கள் சொன்னது பலிக்கும் என்பது இதுதான்

நிச்சயம் திமுக ஒரு நாடக கம்பெனி, அதிமுக எனும் சக நாடக சபாவுடன் அது போட்டி நாடகம் நடத்தி கொண்டிருந்தது

பெரியார் சாமி தொடங்கி வைத்த அந்த கான கோஷ்டி சபா பின் அண்ணா எனும் நாடக ஆசிரியரால் தனி சபா கண்டது

பின்பு கலைஞர் பாகவதர் என்பவர் நடத்தி கொண்டிருந்தார், அவர்தான் ராஜபாட்

சாகசமாக தன் நாடக சபாவினை போராட்ட இயக்கம், சமூக பாதுகாப்பு திராவிட பாசறை, போருக்கு தயாரான பெரும்படை என ஒரு முகமூடி வைத்திருந்தால் கலைஞர்

ஆனால் அவரைவிட மிக சிறந்த ராஜபாட்டையான ராமசந்திரன் தனி கான சபா ஆரம்பித்தார், அது இன்றளவும் இயங்கி கொண்டிருக்கின்றது

அந்த போராட்ட இயக்க முகமூடியினை கிழித்து , உண்மையிலே அது நாடக கம்பெனி என நிரூபிக்கின்றது இன்றைய கோஷ்டி

முக ஸ்டாலின் எனும் புதிய ராஜபாட்டையால் அதை பழைய ராஜபாட்டை போல கொண்டு செல்ல முடியவில்லை, பழைய ராஜபாட்டை அசகசாய சூரத்தனமானது

இதனால் நாடக கம்பெனியின் உண்மை முகம் தெரிகின்றது

மற்றபடி அதிமுக எனும் நாடக சபா பிரமாதமாக இயங்கி கொண்டிருக்கின்றது

தினகர பாகவதர் என்பவரால் அந்த நாடக கோஷ்டிக்கு டப் கொடுக்க முடியவில்லை அது போக ஊர் நாட்டாமையின் ஆதரவும் அவர்களுக்கு இருக்கின்றது