அதிர்ச்சி அளிக்கின்றது

தெலுங்கானா அதிர்ச்சி தீருமுன்பே கோவையில் பள்ளி மாணவியினை ஒரு கோஷ்டி பாலியல் வல்லுறவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது

இப்பொழுதெல்லாம் காதலர்கள் தனியாக ஒதுங்குவதும், அதை கவனிக்கும் சமூக விரோதிகள் அவர்கள் வீட்டில் சொல்ல அஞ்சுவார்கள் என கணித்து அந்த பெண்ணை நாசமாக்குவதும் தொடர்கதையாகின்றது

கல்லணையில் ஒருவனை கொன்றே விட்டார்கள்

ஓரிரு சம்பவம் வெளிதெரிகின்றதே தவிர நிறைய தெரிவதில்லை என்பதுதான் நிஜம், மிரட்டியே காரியம் சாதிக்கும் கும்பல் அதிகபட்டுவிட்டது போதாகுறைக்கு வீடியோ எடுத்தும் மிரட்டுகின்றார்கள்

இதெல்லாம் தடுக்க தனி சட்டமும் தனி வாரியமும் தனிபடையும் அமைக்கும் அளவு நிலமை சென்றாலும், பெண்களின் பாதுகாப்பு பெண்கள் கையிலும் இருக்கின்றது

பாக்யராஜ் இதைத்தான் சொன்னார், பெண்களும் பாதுகாப்பாக இருந்த்தல் வேண்டுமென்றார் அதற்குத்தான் பொங்குகின்றார்கள்

போகிற போக்கை பார்த்தால் 10ம் வகுப்பிலே ஆண்களுக்கு தனியே பட்டினத்தார் பாடலில் தேர்ச்சி பெற்றால்தான் சான்றிதழ் எனும் நிலை வரும்போலிருக்கின்றது

இம்மாதிரி பட்டினத்தார் பாடல்களை பதிய வைத்தால் ஒரு பயலுக்கு இந்த எண்ணம் வரும், இது தொடக்கபாடல்தான் இன்னும் ஏகபட்ட கடும் பாடல்களை வைத்திருகின்றார் பட்டினத்தார்

“காமப் பாழி; கருவிளை கழனி;
தூமைக் கடவழி; தொளைபெறு வாயில்;
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி!
மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்;
நச்சிக் காமுக நாய்தான் என்றும்

இச்சித் திருக்கும் இடைகழி வாயில்;
திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி;
புண் இது என்று புடவையை மூடி
உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண்

மால்கொண்டு அறியா மாந்தர் புகும்வழி;
நோய் கொண்டு ஒழியார் நுண்ணியர் போம்வழி;
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி;
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி

ஊற்றைச்சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த
பீற்றற் றுத்தியைச் சோறிடுந்தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே
ஏற்றுத் திரிந்து விட்டேன் இறைவாகச்சி ஏகம்பனே.”

மனமதனை எரித்த சிவனின் அடியவரான பட்டினத்தாரும் தன் ஞானபாடலில் அந்த மன்மதனை ஓட ஓட அடித்திருக்கின்றார். அவர் நிச்சயம் ஞானியாய் இருந்திருக்கின்றார்