அதுல என்னடா கணக்கு?

“அண்ணே இந்த பொள்ளாச்சி சம்பவத்துல கொஞ்சம்தான் உண்மை, மீதி எல்லாம் பொய் அதெல்லாம் நம்பாதீங்க, அதுவும் நக்கீரன நம்பாதீங்க‌

அட நக்கீரன் இப்போ நல்ல வேலைதானடா செஞ்சிருக்காங்க,பின்ன ஏண்டா?

அதில இருக்குற கணக்கு உங்களுக்கு தெரியாது, ஏமாந்துடாதீங்க?

அதுல என்னடா கணக்கு?

அண்ணே அதுலதான் இருக்கு விஷயம், அவங்க அதிமுக புள்ளின்னு கோர்த்துவிடுறாங்க அது எதுக்கு தெரியுமா? எங்கள தோற்கடிக்க, மோடிய விரட்ட‌

டேய் சங்கி, இதுல மோடி எங்க இருந்து வந்தாரு?

அண்ணே அதிமுகவும் நாங்களும் கூட்டணி, இப்போ இப்படி அதிமுக மேல புகார் வந்தா, எங்களுக்கும் மோடிக்கும் இருக்குற நல்ல பெயர் கெட்டு போயிரும், கட்சிக்கான மரியாதை போயிரும்

அடேய் ஆமை மண்டையா, உனக்கே அடுக்குமாடா? உங்களுக்கும் உங்க கட்சிக்கும் எங்கடா இங்க நல்ல பெயர் இருக்கு? இதுல என்ன இனி கெட்டு போக இருக்கு? எங்கடா இருக்கு உங்க மரியாதை?

உங்களுக்கு தெரியாதுண்ணே,தமிழ்நாடே மோடிக்கும் பழனிச்சாமிக்கும் வோட்டுபோட துடிச்சிட்டு இருக்கு, இந்த பொள்ளாச்சி விவகாரம் எங்க வாக்கு வங்கிய பாதிக்கும்ணே

வாய் அவிஞ்சி போகும்டா, இப்படி எல்லாம் பொய்யா சொல்லாதடா, எங்கே அமித்ஷாவினை தமிழ்நாட்டுக்கு வரசொல்லு பார்க்கலாம்

அண்ணே அப்படியில்ல, நாங்க இப்போ 40 தொகுதில வெற்றிபெறும் நிலமையில இருக்கோம், அத தடுக்கதான் இந்த சதி

அடேய் இன்னைக்கு உன்ன விடுறதில்லடா? ஏண்டா அவ்வளவு பெரிய கொடும நடந்திருக்கு, அத பற்றி பேசாம 40 தொகுதியா உன்ன…

அண்ணே நாங்க எப்பவும் உண்மையத்தான் சொல்வோம்

ஆமாடா, தூத்துகுடில 13 பேர் செத்தால் அந்த துயரத்திலியும் கோபம் வர்ற மாதிரி பேசணும், பொள்ளாச்சிக்கு கொந்தளிச்சா அங்கேயும் வந்து “பொண்ணுங்க ஏன் போனாங்க”ண்ணு தத்துவம் பேசணும், இப்படியே இருங்கடா, ஒரு வோட்டும் வாங்கமாட்டீங்க, தமிழ்நாடு நல்லா இருக்கும்டா

அது கிடக்கட்டும்ணே, இனி எங்க கூட்டணி நல்ல பெயரை கெடுக்காதீங்க, பொறுக்கமாட்டோம்

மவன எங்கடா நல்ல பெயர் இருக்கு? ஒரு இடைதேர்தலுக்கு முகம் கொடுக்க பயந்த பய எல்லாம் நல்லபெயரை பற்றி பேசுறீங்க, தேர்தல்ல டவுடர் கிழியும் போடா

டவுசர் கிழிஞ்சாலும் தாமரை அதில் மலரும்ணே

அடேய் நிக்காத ஓடிரு…”