அது சர்வ நிச்சய உண்மை
அது சர்வ நிச்சய உண்மை
பெரியாரின் திருமணத்துக்கு முன்பே திராவிட கழகத்தில் சலசலப்புகள் இருந்தன, கண்ணதாசனே தன் வனவாசத்தில் பெரியாரின் கொடுமைகள் பற்றி கலைஞர் சொன்னதாக சில வரிகளை எழுதியிருந்தார்
சுதந்திரம் நெருங்க நெருங்க அண்ணாவுக்கும் பெரியாருக்கும் கருத்து வேறுபாடுகள் விழுந்தன
சுதந்திர நாளை பெரியார் துக்கநாள் என சொல்ல அண்ணா இன்பநாள் என்றார்
அந்த முரண்பாட்டு நடுவில் “அய்யா ஆணையிடுகின்றார் அண்ணா ஊளையிடுகின்றார்” என எழுதியவர் கலைஞர்
மணியம்மை திருமணத்தை முன்னிட்டு அண்ணா கோஷ்டி கிளம்பியது திடீர் புரட்சி அல்ல, அதனை வாய்ப்பாக பயன்படுத்தினர் அவ்வளவே
கலைஞரும் அவரோடு சென்றார்
அதன் பின் பெரியார் திமுகவினரை சாடியதும், அவரை படுபயங்கர சொற்களில் அன்றி நயமான சொற்களால் அண்ணாவும் திமுகவினரும் குத்தியதும் வரலாறெங்கும் கிடக்கின்றது
பெரியார் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார் அது “உதிர்ந்த மயிர்கள்” என்பதையும் தாண்டி சென்றது
திமுகவினர் சொன்னதெற்கெல்லாம் எதிராக பேசிகொண்டிருந்தார் பெரியார், அவர்களோ ராஜாஜியும் காமராஜரும் பெரியாரை தூண்டிவிடுவதாக சொல்லிகொண்டிருந்தனர்
ஒரு கட்டத்தில் திகவும் திமுகவும் வரிந்து கட்டி மோத தொடங்கின, அதுவும் ராமசந்திரனையும் சினிமாகாரர்களையும் அண்ணா முன்னிறுத்துவதால் வந்த மோதல்
பெரியாரும் எம்.ஆர் ராதாவும் ஒருபக்கமும், கலைஞரும் அண்ணாவும் இன்னும் பலருமாக அப்பக்கமும் களைகட்டியது
எல்லாம் 1967ல் அண்ணா வெல்லும் வரை
ஆட்சி மாறியதும் அண்ணாவிடம் சரணடைந்தார் பெரியார்
அதன்பின் பெரியார் அவர்களின் இதய தெய்வமானார்
பெரியாரும் ஆட்சி எவனிடம் இருக்கின்றதோ அவனை சுத்தமாக பகைக்காத சந்தர்ப்பவாதி
திமுகவினரும் யாராவது காதுகிழிய அசிங்க அசிங்கமாக திட்டிவிட்டு வந்தாலும் ஏற்றுகொள்ளும் பெரிய மனம் கொண்டது
அப்படித்தான் இப்பொழுது வைகோவினையும் சேர்த்திருகின்றார்கள்
பெரியாரை திமுக எவ்வளவும் எதிர்க்கலாம், விமர்சிக்கலாம், விரட்டலாம் பிரியலாம்
பின் தேவை ஏற்படின் சேர்க்கலாம்
ஆனால் இன்னொருவர் விமர்சித்தால் அவர்களின் பகுத்தறிவும், சுயமரியாதையும் பொங்கிவிடும்