அது பாராளுமன்றம்

அது பாராளுமன்றம், அது மதங்களை கொள்கைகளை மக்களின் சில நம்பிக்கைகளை கடந்து நாட்டு நலன் ஒன்றே, மக்களின் முன்னேற்றம் ஒன்றே பற்றி சிந்திக்க கூடியிருக்கும் இடம்

இவர்கள் அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் என கத்தியதும் பெரும் தவறு அவர்கள் அங்கு ஸ்ரீராம் என கத்தியதும் தவறு,

புனிதமான பாராளுமன்றத்தை சில‌அடையாளமாக‌ கூடமாக மாற்ற முயல்வது தவறு,கண்டிக்க வேண்டியது.

அது போராட வேண்டிய களம் அல்ல, அது நாட்டுக்கான விவாத கூடம்.

அவர்கள் “ஜெய் ஸ்ரீராம்” என கத்தினால் பதிலுக்கு இவர்கள் “ஜெய் ராவணா”, “ஜெய் கும்பகர்ணா” என கத்தியிருந்தால் விஷயம் சூடு பிடித்திருக்கும்

அப்படி எல்லாம் சொல்ல கலைஞர் வேண்டும், இவர்களால் அப்படி எல்லாம் சிந்திக்க கூட முடியாது

நினைத்து பாருங்கள்? அவர்கள் “ஸ்ரீராம்.” என கத்தும்பொழுது “ஜெய் ராவணா..” என கனிமொழி கத்தினால் அதுதான் பதிலடி

அட அவர்களுக்காவது அறிவு வேண்டும், இவர்கள் பெரியார் என கத்தினால் “எம்ஜி ராம்சந்தர்” என அவர்கள் திருப்பி சொன்னால் தமிழக எம்பிக்கள் முகத்தில் ஈயாடியிருக்கும்

அவர்கள் அம்பேத்கர் என சொல்லும் பொழுது, “எங்கே அவரின் புத்த மதம்.. என இவர்கள் திருப்பி கேட்டால் திருமா வாய்மூடி வந்திருப்பார்

அவர்கள் மார்க்ஸ் என கத்தும்பொழுது “அழிந்து கொண்டிருக்கும் கடைசி உயிரினம் நீங்கள்..” என பதிலுக்கு சொல்லியிருந்தால் பா.வெங்கடேசன் ஓடி வந்திருப்பார்

இவர்கள் “தமிழ் வாழ்க..” என சொல்லும் பொழுது “நாங்களெல்லாம் எங்கள் மொழி வாழ்க என கிளம்பினால் இங்கு சண்டைதான் நிகழும், அதையா விரும்புகின்றீர்கள்..” என அக்கோஷ்டி எழும்பினால் இங்கு சத்தமே இருந்திருக்காது

எதை செய்யவேண்டுமோ அதை செய்வதில்லை, எதை செய்ய கூடாது அதை பாஜக கோஷ்டி சரியாக செய்யும்

எப்படியாயினும் இந்த கோஷங்கள் களையபட வேண்டியவை, பாராளுமன்றத்தின் புனிதம் காக்கபடட்டும்

இனியாவது அக்கூட்டங்கள் திருந்தட்டும்

மாறாக இந்நிலை தொடர்ந்தால் சங்கம் பாராளுமன்றத்தில் நுழையும் காலம் வரும் பொழுது “ஜெய் குஷ்பு” “குஷ்பு வாழ்க வாழ்க வாழ்ந்து கொண்டே இருக்க” என சொல்லி சங்கம் பதவிபிரமாணம் எடுக்கும்..